Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Ascetic Virtue. Show all posts
Showing posts with label Ascetic Virtue. Show all posts

0241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்

0241. Arutchelvam Selvaththul Selvam

  • குறள் #
    0241
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
  • விளக்கம்
    செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் உயிர்களிடம் அருள் கொண்டிருக்கும் செல்வம்; பொருளால் வரும் செல்வங்கள் கீழோரிடத்தும் உண்டு.
  • Translation
    in English
    Wealth 'mid wealth is wealth 'kindliness';
    Wealth of goods the vilest too possess.
  • Meaning
    The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.

0242. நல்லாற்றாள் நாடி அருளாள்க

0242. Nallaatraal Naadi Arullalga

  • குறள் #
    0242
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.
  • விளக்கம்
    நல்ல வழியில் நின்று விரும்பி அருளுடைய செயல்களைச் செய்க; ஏனென்றால், பல வழியில் ஆராய்ந்து பார்த்தாலும் அதுவே உயிருக்குத் துணை.
  • Translation
    in English
    The law of 'grace' fulfil, by methods good due trial made,
    Though many systems you explore, this is your only aid.
  • Meaning
    (Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)

0243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை

0243. Arulserndha Nenjinaark Killai

  • குறள் #
    0243
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
  • விளக்கம்
    உயிர்களிடத்தில் கருணையுள்ள மனமுடையவர், இருள் நிறைந்த துன்பமுடைய நரகத்தில் செல்ல மாட்டார்.
  • Translation
    in English
    They in whose breast a 'gracious kindliness' resides,
    See not the gruesome world, where darkness drear abides.
  • Meaning
    They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

0244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு

0244. Mannuyir Oombi Arulaalvaarkku

  • குறள் #
    0244
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.
  • விளக்கம்
    உயிர்களிடம் கருணையைச் செலுத்தும் அருளாளர்களிடத்துத் தமது உயிர் அஞ்சுவதற்குக் காரணமான பாவச் செயல்கள் தோன்றா.
  • Translation
    in English
    Who for undying souls of men provides with gracious zeal,
    In his own soul the dreaded guilt of sin shall never feel.
  • Meaning
    (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)

0245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை

0245. Allal Arulaalvaarkku Illai

  • குறள் #
    0245
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
  • விளக்கம்
    அருள் உடையவர்களுக்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளமான பேருலகில் வாழ்பவரே இதற்குச் சாட்சியாவார்.
  • Translation
    in English
    The teeming earth's vast realm, round which the wild winds blow,
    Is witness, men of 'grace' no woeful want shall know.
  • Meaning
    This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted.

0246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்

0246. Porulneengip Pochchaandhaar Enbar

  • குறள் #
    0246
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
  • விளக்கம்
    அருள் இல்லாதவராய்க் கொடுமைகளைச் செய்து வாழ்பவர், உறுதிப் பொருளைவிட்டுத் தமக்கு வரும் துன்பத்தையும் மறந்தவராவர்.
  • Translation
    in English
    Gain of true wealth oblivious they eschew,
    Who 'grace' forsake, and graceless actions do.
  • Meaning
    (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)

0247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை

0247. Arulillaarkku Avvulagam Illai

  • குறள் #
    0247
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
  • விளக்கம்
    பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்தில் இன்பம் இல்லாதிருப்பது போல, உயிர்களிடத்தில் அருளில்லாதவர்களுக்கு மறுஉலகத்தில் இன்பம் இல்லை.
  • Translation
    in English
    As to impoverished men this present world is not;
    The 'graceless' in you world have neither part nor lot.
  • Meaning
    As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

0248. பொருளற்றார் பூப்பர் ஒருகால்

0248. Porulatraar Pooppar Orukaal

  • குறள் #
    0248
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது.
  • விளக்கம்
    பொருளில்லாதவர் ஒரு காலத்தில் செல்வமுடையவராவர்; அருளிள்ளதவர் வாழ்க்கையின் பயன் அற்றவர். அவர் பின்னர் ஒருபோதும் சிறந்து விளங்கமாட்டார்.
  • Translation
    in English
    Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
    Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
  • Meaning
    Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

0249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்

0249. Therulaathaan Meipporul Kandatraal

  • குறள் #
    0249
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
  • விளக்கம்
    அருளில்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்தால், அது தெளிந்த அறிவில்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டது போன்றதாகும்.
  • Translation
    in English
    When souls unwise true wisdom's mystic vision see,
    The 'graceless' man may work true works of charity.
  • Meaning
    If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

0250. வலியார்முன் தன்னை நினைக்கதான்

0250. Valiyaarmun Thannai Ninaikkathaan

  • குறள் #
    0250
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    அருளுடைமை(Aruludaimai)
    The Possession of Benevolence
  • குறள்
    வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
    மெலியார்மேல் செல்லு மிடத்து.
  • விளக்கம்
    தன்னைவிட எளியவரைத் தான் வருத்தச் செல்லும் பொது, தான் வலியவர்முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைத்துக் கொள்ளல் வேண்டும்.
  • Translation
    in English
    When weaker men you front with threat'ning brow,
    Think how you felt in presence of some stronger foe.
  • Meaning
    When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

0251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது

0251. Thannoon Perukkarkuth Thaanpiridhu

  • குறள் #
    0251
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.
  • விளக்கம்
    தன் உடம்பைப் பருக்கச் செய்வதற்கு, தான் வேறு ஒன்றின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் அவ்வாறு அருளை உடையவனாக இருத்தல் முடியும்?
  • Translation
    in English
    How can the wont of 'kindly grace' to him be known,
    Who other creatures' flesh consumes to feed his own?
  • Meaning
    How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.

0252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை

0252. Porulaatchi Potraathaarkku Illai

  • குறள் #
    0252
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
  • விளக்கம்
    பொருளால் பயன் பெறுதல் அதனைப் பாது காவாதவர்க் கில்லை; அதுபோல் அருளால் பயன் பெறுதல் புலால் உண்பவர்க்கில்லை.
  • Translation
    in English
    No use of wealth have they who guard not their estate;
    No use of grace have they with flesh who hunger sate.
  • Meaning
    As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.

0253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது

0253. Padaikondaar Nenjampol Nanookkaathu

  • குறள் #
    0253
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.
  • விளக்கம்
    கொலைக் கருவியைக் கையில் வைத்திருப்பவனுடைய மனம் நல்லவற்றை நினையாதது போலப் பிற உயிரின் ஊனை உண்டு சுவை கண்டவர் நல்லவற்றை நினைக்க மாட்டார்.
  • Translation
    in English
    Like heart of them that murderous weapons bear, his mind,
    Who eats of savoury meat, no joy in good can find.
  • Meaning
    Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.

0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை

0254. Arulallathu Yaathenin Kollaamai

  • குறள் #
    0254
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.
  • விளக்கம்
    அருள் என்பது பிற உயிரைக் கொள்ளாதிருத்தல்; அருள் அல்லாதது எது என்றால் உயிர்களைக் கொள்ளுதல்; ஆகையால் கொலையால் வரும் ஊனை உண்ணுதல் புண்ணியமற்றது - பாவம்.
  • Translation
    in English
    'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
    To eat dead flesh can never worthy end fulfil.
  • Meaning
    If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).

0255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை

0255. Unnaamai Ullathu Uyirnilai

  • குறள் #
    0255
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
  • விளக்கம்
    ஊன் உண்ணாமையால் உயிர் அழிந்து போகாமல் நிலைபெறும்; ஊன் உண்ட ஒருவனை நரகம் வெளியே விடாது.
  • Translation
    in English
    If flesh you eat not, life's abodes unharmed remain;
    Who eats, hell swallows him, and renders not again.
  • Meaning
    Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).

0256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்

0256. Thinarporuttaal Kollaathu Ulagenin

  • குறள் #
    0256
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
  • விளக்கம்
    உண்பதற்காக உலகத்தவர் உயிரைக் கொல்ல வில்லையெனில் விற்பதற்காகக் கொலை செய்து ஊன் விற்பவர் எவரும் இரார்.
  • Translation
    in English
    'We eat the slain,' you say, by us no living creatures die;
    Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?
  • Meaning
    If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

0257. உண்ணாமை வேண்டும் புலாஅல்

0257. Unnaamai Vendum Pulaaal

  • குறள் #
    0257
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.
  • விளக்கம்
    புலால் என்பது வேறோர் உடலின் புண். அதன் இழிநிலையை அறிவாரைப் பெற்றால், அதனை உண்ணாது ஒழிதல் வேண்டும்.
  • Translation
    in English
    With other beings' ulcerous wounds their hunger they appease;
    If this they felt, desire to eat must surely cease.
  • Meaning
    If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.

0258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்

0258. Seyirin Thalaippirindha Kaatchiyaar

  • குறள் #
    0258
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
  • விளக்கம்
    குற்றமற்ற அறிவுடையார், ஓர் உயிரிலிருந்து பிரிந்த ஊனை உண்ண மாட்டார்.
  • Translation
    in English
    Whose souls the vision pure and passionless perceive,
    Eat not the bodies men of life bereave.
  • Meaning
    The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.

0259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின்

0259. Avisorind Thaayiram Vettalin

  • குறள் #
    0259
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.
  • விளக்கம்
    நெய் முதலிய பொருட்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட, ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாதிருத்தல் நல்லது.
  • Translation
    in English
    Than thousand rich oblations, with libations rare,
    Better the flesh of slaughtered beings not to share.
  • Meaning
    Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

0260. கொல்லான் புலாலை மறுத்தானைக்

0260. Kollaan Pulaalai Maruththaanaik

  • குறள் #
    0260
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.
  • விளக்கம்
    உயிரைக் கொல்லாதவனாகவும், ஊனை உன்னதவனாகவும் உள்ளவனை எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும்.
  • Translation
    in English
    Who slays nought,- flesh rejects- his feet before
    All living things with clasped hands adore.
  • Meaning
    All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.