Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Domestic Virtue. Show all posts
Showing posts with label Domestic Virtue. Show all posts

0041. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய

0041. Ilvaazhvaan Enbaan Iyalbudaiya

  • குறள் #
    0041
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.
  • விளக்கம்
    இல்லறத்தில் வாழ்கின்றவன் என்னும் சிறப்புடையவன் மற்ற (கல்வி, மனைத்துறவு, துறவு) அறநிலைகளில் உள்ள மூவர்க்கும் நல்ல ஒழுக்க நெறியில் உறுதியான துணையாவான்.
  • Translation
    in English
    The men of household virtue, firm in way of good, sustain
    The other orders three that rule professed maintain.
  • Meaning
    He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

0042. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்

0042. Thurandhaarkkum Thuvvaathavarkkum

  • குறள் #
    0042
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
    என்பான் துணை.
  • விளக்கம்
    துறவியர்க்கும் ஏழைக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்க்கையில் இருப்பவன் துணையாவான்.
  • Translation
    in English
    To anchorites, to indigent, to those who've passed away,
    The man for household virtue famed is needful held and stay.
  • Meaning
    He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

0043. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்

0043. Thenbulaththaar Theivam Virundhokkal

  • குறள் #
    0043
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
  • விளக்கம்
    தென் புலத்தார், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து வகையாளரிடத்தும் செய்ய வேண்டிய அறச் செயல்களைத் தவறாமல் ஒருவன் செய்தல், சிறந்த கடமையாகும்.
  • Translation
    in English
    The manes, God, guests kindred, self, in due degree,
    These five to cherish well is chiefest charity.
  • Meaning
    The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.

0044. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்

0044. Pazhiyanjip Paaththoon Udaiththaayin

  • குறள் #
    0044
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
  • விளக்கம்
    பழிக்கு அஞ்சுதல், நல்வழியில் வந்த பொருளைப் பகுத்து உண்ணுதல் ஆகிய இரண்டும் ஒருவனது இல்வாழ்க்கையில் இருந்தால், அவனது சந்ததி எப்போதும் குறைவது இல்லை.
  • Translation
    in English
    Who shares his meal with other, while all guilt he shuns,
    His virtuous line unbroken though the ages runs.
  • Meaning
    His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

0045. அன்பும் அறனும் உடைத்தாயின்

0045. Anbum Aranum Udaiththaayin

  • குறள் #
    0045
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
  • விளக்கம்
    ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியர்க்கு இடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
  • Translation
    in English
    If love and virtue in the household reign,
    This is of life the perfect grace and gain.
  • Meaning
    If the married life possess love and virtue, these will be both its duty and reward.

0046. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்

0046. Araththaatrin Ilvaazhkkai Aatrin

  • குறள் #
    0046
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ எவன்.
  • விளக்கம்
    ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்துவானானால், அவன் வேறு வழியில் சென்று பெறும் மேலான பயன் இல்லை.
  • Translation
    in English
    If man in active household life a virtuous soul retain,
    What fruit from other modes of virtue can he gain?
  • Meaning
    What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?

0047. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்

0047. Iyalbinaan Ilvaazhkkai Vaazhbavan

  • குறள் #
    0047
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.
  • விளக்கம்
    இல்வாழ்க்கையில் வாழ்ந்து, அதற்குரிய நல்ல முறையிலே ஒழுகுகின்றவன், மறுமை இன்பத்தை நாடி முயற்சி செய்கின்றவரை விடச் சிறந்தவன் ஆவான்.
  • Translation
    in English
    In nature's way who spends his calm domestic days,
    'Mid all that strive for virtue's crown hath foremost place.
  • Meaning
    Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.

0048. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா

0048. Aatrin Ozhukki Aranizhukkaa

  • குறள் #
    0048
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.
  • விளக்கம்
    தவம் செய்கின்றவரையும் அவர் வழியில் ஒழுகச் செய்து, தானும் அறநெறியில் தவறாது நின்று வாழ்பவனின் இல்வாழ்க்கையானது, தவம் செய்வாரை விட வன்மை உடையதாகும்.
  • Translation
    in English
    Others it sets upon their way, itself from virtue ne'er declines;
    Than stern ascetics' pains such life domestic brighter shines.
  • Meaning
    The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

0049. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை

0049. Aranenap Pattathe Ilvaazhkkai

  • குறள் #
    0049
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
  • விளக்கம்
    அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதே இல்வாழ்கை. அதுவும் பிறர் பழிக்கும் தீமைகள் இல்லையானால் சிறப்புடையதாகும்.
  • Translation
    in English
    The life domestic rightly bears true virtue's name;
    That other too, if blameless found, due praise may claim.
  • Meaning
    The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

0050. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

0050. Vaiyaththul Vaazhvaangu Vaazhbavan

  • குறள் #
    0050
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
    Domestic Life
  • குறள்
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.
  • விளக்கம்
    இவ்வுலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன், மேலுலகத்திலுள்ள தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான்.
  • Translation
    in English
    Who shares domestic life, by household virtues graced,
    Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
  • Meaning
    He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.

0051. மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற்

0051. Manaikthakka Maanbudaiyal Aagiththar

  • குறள் #
    0051
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
  • விளக்கம்
    இல்லறதுக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் உடையவளாகிக் கணவனின் வரவுக்கேர்ப்பச் செலவு செய்கின்றவளே சிறந்த மனைவி.
  • Translation
    in English
    As doth the house beseem, she shows her wifely dignity;
    As doth her husband's wealth befit, she spends: help - meet is she.
  • Meaning
    She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

0052. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்

0052. Manaimaatchi Illaalkan Illaayin

  • குறள் #
    0052
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.
  • விளக்கம்
    இல்வாழ்கைக்கேற்ற சிறந்த குணங்கள் மனைவியிடம் இல்லையானால், அவ்வாழ்க்கை எவ்வளவு சிறந்திருந்தாலும் பயன் இல்லை.
  • Translation
    in English
    If household excellence be wanting in the wife,
    Howe'er with splendour lived, all worthless is the life.
  • Meaning
    If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

0053. இல்லதென் இல்லவள் மாண்பானால்

0053. Illathen Illaval Maanbaanaal

  • குறள் #
    0053
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை.
  • விளக்கம்
    மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளானால் கணவனிடத்தில் இல்லாதது இல்லை. அவள் அவ்வாறு இல்லாதவளானால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை ஆகும்.
  • Translation
    in English
    There is no lack within the house, where wife in worth excels,
    There is no luck within the house, where wife dishonoured dwells.
  • Meaning
    If his wife be eminent (in virtue), what does (that man) not possess? If she be without excellence, what does (he) possess ?

0054. பெண்ணின் பெருந்தக்க யாவுள

0054. Pennin Perundhakka Yaavula

  • குறள் #
    0054
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
  • விளக்கம்
    மனைவியிடத்தில் கற்பு என்னும் மன உறுதி உண்டாகியிருக்கப் பெற்றால், கணவன் அடைய கூடியவற்றுள் அம்மனைவியைவிட மேலான பொருள் வேறு இல்லை.
  • Translation
    in English
    If woman might of chastity retain,
    What choicer treasure doth the world contain?
  • Meaning
    What is more excellent than a wife, if she possess the stability of chastity?

0055. தெய்வம் தொழாஅள் கொழுநன்

0055. Deivam Thozhaaal Kozhual

  • குறள் #
    0055
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.
  • விளக்கம்
    தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கணவனைத் தெய்வம் என நினைத்து, அவனைத் தொழுது காலையில் துயில் எழுகின்றவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
  • Translation
    in English
    No God adoring, low she bends before her lord;
    Then rising, serves: the rain falls instant at her word!
  • Meaning
    If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

0056. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்

0056. Tharkaaththuth Tharkondaar Penith

  • குறள் #
    0056
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
  • விளக்கம்
    கற்பிலிருந்து தவறாமல் தன்னைக் காத்தும், தன் கணவனைப் பாதுகாத்தும், இருவரிடத்தும் புகழ் நீங்காமல் காத்தும், தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே சிறந்த பெண்ணாவாள்.
  • Translation
    in English
    Who guards herself, for husband's comfort cares, her household's fame,
    In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.
  • Meaning
    She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

0057. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்

0057. Siraikaakkum Kaappevan Seiyum

  • குறள் #
    0057
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.
  • விளக்கம்
    மகளிரைக் காவல் வைத்துக் காத்தலால் பயனில்லை; அவர்கள் தம் ஒழுக்கத்தால் தம்மைக் காத்துக் கொள்கிற காவலே சிறந்தது.
  • Translation
    in English
    Of what avail is watch and ward?
    Honour's woman's safest guard.
  • Meaning
    What avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.

0058. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர்

0058. Perraar Perinperuvar Pendir

  • குறள் #
    0058
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.
  • விளக்கம்
    மனைவியர் தம் கணவரை வணங்கி அவர் அன்பைப் பெறுவாரானால், அவர்கள் தேவருலகில் பெருஞ்சிறப்பைப் பெறுவார்கள்.
  • Translation
    in English
    If wife be wholly true to him who gained her as his bride,
    Great glory gains she in the world where gods bliss abide.
  • Meaning
    If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

0059. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை

0059. Pugazhpurindha Illilorkku Illai

  • குறள் #
    0059
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.
  • விளக்கம்
    கற்பினால் உண்டாகும் புகழுடைய மனைவி பெறாதவர், தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னால் பெருமிதமாக நடக்க முடியாது.
  • Translation
    in English
    Who have not spouses that in virtue's praise delight,
    They lion-like can never walk in scorner's sight.
  • Meaning
    The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

0060. மங்கலம் என்ப மனைமாட்சி

0060. Mangalam Enba Manaimaatchi

  • குறள் #
    0060
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
    The Goodness of the help to Domestic Life
  • குறள்
    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.
  • விளக்கம்
    மனைவியும் நற்குண நற்செய்கைகளே இல்வாழ்க்கைக்கு மங்கலம் (நன்மை) என்பர். நல்ல மக்களைப் பெறுதல் அம்மங்கலத்திற்கு அழகு என்றும் அறிவுடையோர் கூறுவர்.
  • Translation
    in English
    The house's 'blessing', men pronounce the house-wife excellent;
    The gain of blessed children is its goodly ornament.
  • Meaning
    The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.