Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Shame. Show all posts
Showing posts with label Shame. Show all posts

1011. கருமத்தால் நாணுதல் நாணுந்

1011. Karumaththaal Naanuthal Naanundh

  • குறள் #
    1011
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற.
  • விளக்கம்
    நாணம் என்பது தகாத செயலைச் செய்ய அஞ்சுவதாகும். வேறு வகையில் வரும் நாணங்கள், அழகிய நெற்றியையுடைய குலமகளிரது நாணங்கள் போன்றவையாகும்.
  • Translation
    in English
    To shrink abashed from evil deed is 'generous shame';
    Other is that of bright-browed one of virtuous fame.
  • Meaning
    True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம்

1012. Oonudai Echcham Uyirkkellaam

  • குறள் #
    1012
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.
  • விளக்கம்
    உணவும் உடையும் அவை தவிர மற்றவையும் உயிர்க்கெல்லாம் பொதுவாகும்; நன்மக்களுக்குச் சிறப்பாவது நாணமுடைமையே.
  • Translation
    in English
    Food, clothing, and other things alike all beings own;
    By sense of shame the excellence of men is known.
  • Meaning
    Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம்

1013. Oonaik Kuriththa Uyirellaam

  • குறள் #
    1013
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
    நன்மை குறித்தது சால்பு.
  • விளக்கம்
    உயிர்களெல்லாம் உடம்பை இருப்பிடமாகக் கொண்டுள்ளன; அதுபோல, நிறைந்த குணம் என்பது நாண் என்னும் நற்குணத்தை இருப்பிடமாகவுடையது.
  • Translation
    in English
    All spirits homes of flesh as habitation claim,
    And perfect virtue ever dwells with shame.
  • Meaning
    As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

1014. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு

1014. Aniandro Naanudaimai Sandrorkku

  • குறள் #
    1014
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணிஅன்றோ பீடு நடை.
  • விளக்கம்
    நிறைகுணமுடையவர்க்கு, செய்யத்தகாதவற்றைச் செய்ய நாணுதல் ஓர் அணி போன்றதாகும். தீமைக்கு அஞ்சாதவரின் கம்பீரமான நடை, கண்டார்க்குப் பொறுத்தற்கரிய நோய் போன்றதாகும்.
  • Translation
    in English
    And is not shame an ornament to men of dignity?
    Without it step of stately pride is piteous thing to see.
  • Meaning
    Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).

1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார்

1015. Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar

  • குறள் #
    1015
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
    உறைபதி என்னும் உலகு.
  • விளக்கம்
    பிறர் பழியையும் தம் பழியையும் ஒப்ப அஞ்சுகின்றவர்களை நாணத்துக்கு உறைவிடம் என்று உலகத்தவர் கூறுவர்.
  • Translation
    in English
    As home of virtuous shame by all the world the men are known,
    Who feel ashamed for others, guilt as for their own.
  • Meaning
    The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.

1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ

1016. Naanveli Kollaathu Manno

  • குறள் #
    1016
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.
  • விளக்கம்
    உயர்ந்தவர் தமக்கு நாணத்தைப் பாதுகாவலாகக் கொள்ளாமல், உலகில் வாழ்தலைப் போற்றமாட்டார்.
  • Translation
    in English
    Unless the hedge of shame inviolate remain,
    For men of lofty soul the earth's vast realms no charms retain.
  • Meaning
    The great make modesty their barrier (of defence) and not the wide world.

1017. நாணால் உயிரைத் துறப்பர்

1017. Naanaal Uyiraith Thurappar

  • குறள் #
    1017
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.
  • விளக்கம்
    நாணத்தின் சிறப்பறிந்து அதனைவிடாது ஒழுகுபவர், நாணம் சிதையாமல் இருக்க வேண்டி உயிரை விடுவர்; உயிர் சிதையாமல் இருக்கும் பொருட்டு நாணினை நீக்கார்.
  • Translation
    in English
    The men of modest soul for shame would life an offering make,
    But ne'er abandon virtuous shame for life's dear sake.
  • Meaning
    The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

1018. பிறர்நாணத் தக்கது தான்நாணா

1018. Pirarnaanath Thakkathu Thaannaanaa

  • குறள் #
    1018
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
    அறம்நாணத் தக்கது உடைத்து.
  • விளக்கம்
    பிறர் நாணத்தக்க பழிச்செயலை ஒருவன் நாணாது செய்வானாயின், அவனிடம் அறம் இருக்க நாணும் இயல்புடையதாகும்.
  • Translation
    in English
    Though know'st no shame, while all around asha med must be:
    Virtue will shrink away ashamed of thee!
  • Meaning
    Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்

1019. Kulanchudum Kolgai Pizhaippin

  • குறள் #
    1019
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை.
  • விளக்கம்
    ஒழுக்கம் தவறினால் அது குடிப்பிறப்பைக் கெடுக்கும்; நாணம் இன்றாயின் அஃது அவனுடைய நலன்களை எல்லாம் கெடுக்கும்.
  • Translation
    in English
    'Twill race consume if right observance fail;
    'Twill every good consume if shamelessness prevail.
  • Meaning
    Want of manners injures one's family; but want of modesty injures one's character.

1020. நாண்அகத் தில்லார் இயக்கம்

1020. Naanagath Thillaar Iyakkam

  • குறள் #
    1020
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    நாணுடைமை (Naanudaimai)
    Shame
  • குறள்
    நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று.
  • விளக்கம்
    மனத்தில் நாணமில்லாதவரின் நடமாட்டம், மரப் பாவையைக் கயிற்றினால் ஆட்டி உயிருடையது என மயக்குவது போலாகும்.
  • Translation
    in English
    'Tis as with strings a wooden puppet apes life's functions, when
    Those void of shame within hold intercourse with men.
  • Meaning
    The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.