Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Unreal Friendship. Show all posts
Showing posts with label Unreal Friendship. Show all posts

0821. சீரிடம் காணின் எறிதற்குப்

0821. Seeridam Kaanin Eritharkup

  • குறள் #
    0821
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.
  • விளக்கம்
    உண்மையில் மனத்தில் பொருந்தாதவராய், வெளியில் நண்பர் போல் கூடி நடப்பவரது நட்பு, தருணம் வாய்க்கும் போது ஓங்கி அடித்ததற்கு உதவும் பட்டடை (உலைக்கல்) போன்றதாகும்.
  • Translation
    in English
    Anvil where thou shalt smitten be, when men occasion find,
    Is friendship's form without consenting mind.
  • Meaning
    The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

0822. இனம்போன்று இனமல்லார் கேண்மை

0822. Inampondru Inamallaar Kenmai

  • குறள் #
    0822
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்.
  • விளக்கம்
    நண்பர் போன்று நடித்து உண்மையில் நட்பில்லாதவரின் நட்பு, விலைமாதரின் காதல் போல் உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக மாறுபடும்.
  • Translation
    in English
    Friendship of those who seem our kin, but are not really kind.
    Will change from hour to hour like woman's mind.
  • Meaning
    The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

0823. பலநல்ல கற்றக் கடைத்து

0823. Palanalla Katrak Kadaiththu

  • குறள் #
    0823
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது.
  • விளக்கம்
    பல சிறந்த நூல்களைப் படித்தாலும் அதன் பயனாக நல்ல மனம் உடையவராய்ப் பழகுதல், உள்ளன்பினால் மாட்சி இல்லாதவர்க்கு இல்லை.
  • Translation
    in English
    To heartfelt goodness men ignoble hardly may attain,
    Although abundant stores of goodly lore they gain.
  • Meaning
    Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

0824. முகத்தின் இனிய நகாஅ

0824. Mugaththin Iniya Nagaaa

  • குறள் #
    0824
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.
  • விளக்கம்
    முகத்தில் இனியவர் போல் சிரித்து, மனத்தில் தீயவராகிய வஞ்சகருக்கு அஞ்சுதல் வேண்டும்.
  • Translation
    in English
    'Tis fitting you should dread dissemblers' guile,
    Whose hearts are bitter while their faces smile.
  • Meaning
    One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

0825. மனத்தின் அமையா தவரை

0825. Manaththin Amaiyaa Thavarai

  • குறள் #
    0825
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற்று அன்று.
  • விளக்கம்
    மனத்தினால் நட்பு கொள்ளாதவரை, எந்த ஒரு செயலிலும் அவரது சொல்லைக் கொண்டு நம்புதல் கூடாது.
  • Translation
    in English
    When minds are not in unison, 'its never; just,
    In any words men speak to put your trust.
  • Meaning
    In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

0826. நட்டார்போல் நல்லவை சொல்லினும்

0826. Nattaarpol Nallavai Sollinum

  • குறள் #
    0826
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
  • விளக்கம்
    நண்பரைப் போலப் பகைவர் நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும், அவை தீயன என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
  • Translation
    in English
    Though many goodly words they speak in friendly tone,
    The words of foes will speedily be known.
  • Meaning
    Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

0827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க

0827. Solvanakkam Onnaarkan Kollarka

  • குறள் #
    0827
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
  • விளக்கம்
    வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறிக்கும். ஆகையால் பகைவர் கூறும் சொற்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
  • Translation
    in English
    To pliant speech from hostile lips give thou no ear;
    'Tis pliant bow that show the deadly peril near!
  • Meaning
    Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

0828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்

0828. Thozhuthagai Yullum Padaiyodungum

  • குறள் #
    0828
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
  • விளக்கம்
    பகைவர் தொழுவதற்காகக் குவித்த கைகளுக்குள்ளும் கொலை செய்யும் படைக்கலம் மறைந்திருக்கும்; அவர் அழுகின்ற கண்ணீரும் அத்தன்மையுடையதே.
  • Translation
    in English
    In hands that worship weapon ten hidden lies;
    Such are the tears that fall from foeman's eyes.
  • Meaning
    A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

0829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை

0829. Migachcheithu Thammellu Vaarai

  • குறள் #
    0829
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
  • விளக்கம்
    புறத்தே மிகவும் நட்பினைச் செய்து மனத்திலே இகழும் பகைவரைத் தாமும் புறத்தே மகிழ்வித்து மனத்திலே நட்புக் கெடுமாறு ஒழுகுதல் வேண்டும்.
  • Translation
    in English
    'Tis just, when men make much of you, and then despise,
    To make them smile, and slap in friendship's guise.
  • Meaning
    It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

0830. பகைநட்பாம் காலம் வருங்கால்

0830. Pagainatpaam Kaalam Varungkaal

  • குறள் #
    0830
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    கூடா நட்பு (Koodaa Natpu)
    Unreal Friendship
  • குறள்
    பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
  • விளக்கம்
    பகைவர் நண்பராக ஒழுகுங்காலம் வரும்பொழுது, அவரோடு முகத்தளவில் நட்புச் செய்து, மனத்தால் அந்நட்பை நீக்கியிருத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    When time shall come that foes as friends appear,
    Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
  • Meaning
    When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).