Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The obtaining of Sons. Show all posts
Showing posts with label The obtaining of Sons. Show all posts

0061. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை

0061. Perumavatrul Yaamarivathu Illai

  • குறள் #
    0061
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.
  • விளக்கம்
    ஒருவன் அடையக்கூடியவற்றுள், அறிய வேண்டியவற்றை அறிய வல்ல மக்களைப் பெருவதைவிடச் சிறந்ததொன்று இருப்பதாக யாம் அறியவில்லை.
  • Translation
    in English
    Of all that men acquire, we know not any greater gain,
    Than that which by the birth of learned children men obtain.
  • Meaning
    Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

0062. எழுபிறப்பும் தீயவை தீண்டா

0062. Ezhupirappum Theeyavai Theendaa

  • குறள் #
    0062
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
  • விளக்கம்
    பிறர் பழித்ததற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன் பெருவானானால், அவனை எழுவகைப் பிறப்புகளிலும் துன்பங்கள் சென்றடையா.
  • Translation
    in English
    Who children gain, that none reproach, of virtuous worth,
    No evils touch them, through the sev'n-fold maze of birth.
  • Meaning
    The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

0063. தம்பொருள் என்பதம் மக்கள்

0063. Thamporul Enbatham Makkal

  • குறள் #
    0063
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.
  • விளக்கம்
    தம் பிள்ளைகளைப் பெறுதலாகிய அச்செல்வம், அவரவர் செய்யும் நல்வினைகளால் வரும்.
  • Translation
    in English
    'Man's children are his fortune,' say the wise;
    From each one's deeds his varied fortunes rise.
  • Meaning
    Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

0064. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம்

0064. Amizhthinum Aatra Inithetham

  • குறள் #
    0064
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.
  • விளக்கம்
    தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட சோறு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமையுடையதாகும்.
  • Translation
    in English
    Than God's ambrosia sweeter far the food before men laid,
    In which the little hands of children of their own have play'd.
  • Meaning
    The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than
    ambrosia.

0065. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்

0065. Makkalmei Theendal Udarkinbam

  • குறள் #
    0065
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
  • விளக்கம்
    குழந்தைகள் தம் பெற்றோரின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தரும். அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டல் காதுக்கு இன்பம் தரும்.
  • Translation
    in English
    To patent sweet the touch of children dear;
    Their voice is sweetest music to his ear.
  • Meaning
    The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

0066. குழல்இனிது யாழ்இனிது என்பதம்

0066. Kuzhalinithu Yaazhinidhu Enbatham

  • குறள் #
    0066
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
  • விளக்கம்
    தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு மகிழாதவர், குழல் ஓசையும் யாழ் ஓசையும் இனியவை எனக்கூறுவர்.
  • Translation
    in English
    'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
    Who music of their infants' lisping lips have never heard.
  • Meaning
    "The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.

0067. தந்தை மகற்காற்று நன்றி

0067. Thanthai Magarkaatru Nandri

  • குறள் #
    0067
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
  • விளக்கம்
    தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
  • Translation
    in English
    Sire greatest boon on son confers, who makes him meet,
    In councils of the wise to fill the highest seat.
  • Meaning
    The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the
    learned.

0068. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை

0068. Thammintham Makkal Arivudaimai

  • குறள் #
    0068
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
  • விளக்கம்
    தம் மக்கள், தம்மை விடக் கல்வி அறிவுடையவராக இருப்பது, தம்மை விட உலகிலுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    Their children's wisdom greater than their own confessed,
    Through the wide world is sweet to every human breast.
  • Meaning
    That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

0069. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

0069. Eendra Pozhuthin Perithuvakkum

  • குறள் #
    0069
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
  • விளக்கம்
    தன் மகனைப் பிறர் 'அறிவொழுக்கங்களில் சிறந்தவன்' என்று சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
  • Translation
    in English
    When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
    Far greater joy she feels, than when her son she bore.
  • Meaning
    The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

0070. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி

0070. Maganthandhaikku Aatrum Udhavi

  • குறள் #
    0070
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    மக்கட்பேறு (Makkatperu)
    The obtaining of Sons
  • குறள்
    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.
  • விளக்கம்
    தன்னைக் கல்வியுடையவனாகிய தந்தைக்கு மகன் செய்யும் பதில் உதவி என்னவென்றால், 'இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ' என்று சொல்லும்படி நடத்தலாகும்.
  • Translation
    in English
    To sire, what best requital can by grateful child be done?
    To make men say, 'What merit gained the father such a son?'
  • Meaning
    (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.