Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Power in Action. Show all posts
Showing posts with label Power in Action. Show all posts

0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்

0661. Vinaiththitpam Enbathu Oruvan

  • குறள் #
    0661
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.
  • விளக்கம்
    செயலைச் செய்வதற்கேற்ற உறுதி என்று சொல்லப்படுவது, அதைச் செய்பவனுக்கு உள்ள மன உறுதியேயாகும்; அதத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு சிறந்தனவாகா.
  • Translation
    in English
    What men call 'power in action' know for 'power of mind'
    Externe to man all other aids you find.
  • Meaning
    Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை

0662. Oororaal Utrapin Olkaamai

  • குறள் #
    0662
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
  • விளக்கம்
    பழுதுபடும் செயலைச் செய்யாமையும், பழுதுபட்ட விடத்து மனந்தளராமையுமாகிய இவ்விரண்டும் செயலைச் செய்பவரின் நெறியாகும் என அறிவுடையோர் கூறுவர்.
  • Translation
    in English
    'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
    These two define your way, so those that search out truth declare.
  • Meaning
    Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை

0663. Kadaikkotkach Cheithakka Thaanmai

  • குறள் #
    0663
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்.
  • விளக்கம்
    செய்யப்படும் செயலையெல்லாம் மறைத்து முடிவில் வெளிப்படுமாறு செய்வதே வலிமையாகும்; செய்யும் பொது இடையில் வெளிப்பட்டால், அதனால் செய்கின்றவனுக்கு நீங்காத துன்பம் வரும்.
  • Translation
    in English
    Man's fitting work is known but by success achieved;
    In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.
  • Meaning
    So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

0664. சொல்லுதல் யார்க்கும் எளிய

0664. Solluthal Yaarkkum Eliya

  • குறள் #
    0664
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.
  • விளக்கம்
    ஒரு செயலைச் செயவோமேனச் சொல்லுதல் எவருக்கும் எளிது; ஆனால், சொன்னது போலச் செய்வது அரியதாகும்.
  • Translation
    in English
    Easy to every man the speech that shows the way;
    Hard thing to shape one's life by words they say!
  • Meaning
    To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்

0665. Veereithi Maandaar Vinaiththitpam

  • குறள் #
    0665
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
  • விளக்கம்
    செய்யும் செயலால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பம் நாட்டை ஆளும் மன்னனிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்.
  • Translation
    in English
    The power in act of men renowned and great,
    With king acceptance finds and fame through all the state.
  • Meaning
    The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து

0666. Enniya Enniyaangu Yeithu

  • குறள் #
    0666
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.
  • விளக்கம்
    ஒரு பொருளை அடைய எண்ணியவர், அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராகப் பெற்றால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.
  • Translation
    in English
    Whate'er men think, ev'n as they think, may men obtain,
    If those who think can steadfastness of will retain.
  • Meaning
    If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

0667. Uruvukandu Ellaamai Vendum

  • குறள் #
    0667
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.
  • விளக்கம்
    உருண்டு செல்கின்ற பெரிய தேர் அச்சின் சிறிய கடையாணி போன்று பயனுடையவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால் ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது.
  • Translation
    in English
    Despise not men of modest bearing; Look not at form, but what men are:
    For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!
  • Meaning
    Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

0668. கலங்காது கண்ட வினைக்கண்

0668. Kalangaathu Kanda Vinaikkan

  • குறள் #
    0668
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.
  • விளக்கம்
    மனம் கலங்காமல் செய்வதாகத் துணிந்த செயலிடத்துப் பின்னர் தளர்ச்சியில்லாது காலம் நீட்டிக்காது செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    What clearly eye discerns as right, with steadfast will,
    And mind unslumbering, that should man fulfil.
  • Meaning
    An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

0669. துன்பம் உறவரினும் செய்க

0669. Thunbam Uravarinum Seiga

  • குறள் #
    0669
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.
  • விளக்கம்
    துன்பம் மிக வருவதாயினும், இறுதியில் இன்பம் தரும் செயலைத் துணிவோடு செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Though toil and trouble face thee, firm resolve hold fast,
    And do the deeds that pleasure yield at last.
  • Meaning
    Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்

0670. Enaiththitpam Eithiyak Kannum

  • குறள் #
    0670
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    வினைத்திட்பம் (Vinaiththitpam)
    Power in Action
  • குறள்
    எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டாது உலகு.
  • விளக்கம்
    செய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை, அவரிடத்தில் வேறு எந்த வலிமை இருந்தாலும் உலகத்தவர் மதிக்க மாட்டார்.
  • Translation
    in English
    The world desires not men of every power possessed,
    Who power in act desire not,- crown of all the rest.
  • Meaning
    The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.