Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Pouting. Show all posts
Showing posts with label Pouting. Show all posts

1301. புல்லா திராஅப் புலத்தை

1301. Pullaa Thiraaap Pulaththai

  • குறள் #
    1301
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது.
  • விளக்கம்
    தலைவி! நீ காதலரோடு விரைவில் தழுவாது இருந்து பிணங்கு; அப்போது காதலை அடையும் துன்ப நோயினைச் சிறிது காண்போம்.
  • Translation
    in English
    Be still reserved, decline his profferred love;
    A little while his sore distress we 'll prove.
  • Meaning
    Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

1302. உப்பமைந் தற்றால் புலவி

1302. Uppamaindh Thatraal Pulavi

  • குறள் #
    1302
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
  • விளக்கம்
    பிணக்கம், உணவுக்குச் சுவைதரும் உப்புப் போன்றது; அதனை அளவுக்குமேல் அதிகரித்தல், உணவில் உப்புச் சிறிது மிகுந்தது போலாகும்.
  • Translation
    in English
    A cool reserve is like the salt that seasons well the mess,
    Too long maintained, 'tis like the salt's excess.
  • Meaning
    A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.

1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்

1303. Alanthaarai Allalnoi Seithatraal

  • குறள் #
    1303
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.
  • விளக்கம்
    தம்மோடு பிணங்கிய பெண்களைப் பிணக்கினை நீக்கித் தழுவாதுவிடுதல், முன்பே துன்பமுற்று வருந்துகின்றவர்களுக்கு மேலும் துன்பம் இழைப்பது போலாகும்.
  • Translation
    in English
    'Tis heaping griefs on those whose hearts are grieved;
    To leave the grieving one without a fond embrace.
  • Meaning
    For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

1304. ஊடி யவரை உணராமை

1304. Oodi Yavarai Unaraamai

  • குறள் #
    1304
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று.
  • விளக்கம்
    பிணங்கிய பெண்களைப் பிணக்கை நீக்கி கூடாதிருத்தல், வாடிய வள்ளிக்கொடியை அடியிலே அறுத்தார் போன்றது.
  • Translation
    in English
    To use no kind conciliating art when lover grieves,
    Is cutting out the root of tender winding plant that droops.
  • Meaning
    Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்

1305. Nalaththagai Nallavarkku Yeyar

  • குறள் #
    1305
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
    பூஅன்ன கண்ணார் அகத்து.
  • விளக்கம்
    நற்குணங்களால் தகுதியுடைய தலைவர்க்கு அழகாவது, பூப்போன்ற கண்ணையுடைய பெண்ணின் மனத்திலுண்டாகும் பிணக்கமேயாகும்.
  • Translation
    in English
    Even to men of good and worthy mind, the petulance
    Of wives with flowery eyes lacks not a lovely grace.
  • Meaning
    An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

1306. துனியும் புலவியும் இல்லாயின்

1306. Thuniyum Pulaviyum Illaayin

  • குறள் #
    1306
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று.
  • விளக்கம்
    பெரும் பிணக்கும் சிறுபிணக்கும் இல்லையாயின் காதல் இன்பம், மிகப்பழுத்த கனியும் இளங்காயும் போலாகும்.
  • Translation
    in English
    Love without hatred is ripened fruit;
    Without some lesser strife, fruit immature.
  • Meaning
    Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம்

1307. Oodalin Undaangor Thunbam

  • குறள் #
    1307
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று.
  • விளக்கம்
    தலைவி ஊடும்பொழுது, இனி இவளுடன் புணர்ச்சி நீட்டிக்காதோ என்ற ஏக்கம் உண்டாதலால், அவ்வூடற்கண்ணும் ஒரு துன்பம் உண்டு.
  • Translation
    in English
    A lovers' quarrel brings its pain, when mind afraid
    Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'
  • Meaning
    The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று

1308. Nothal Evanmatru Nonthaarendru

  • குறள் #
    1308
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி.
  • விளக்கம்
    இவர் வருந்தினாரென்று அத்துன்பத்தை அறியும் காதலியைப் பெறாதவருக்குப் பிணங்குதலால் பயனில்லை.
  • Translation
    in English
    What good can grieving do, when none who love
    Are there to know the grief thy soul endures?
  • Meaning
    What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

1309. நீரும் நிழலது இனிதே

1309. Neerum Nizhalathu Inithe

  • குறள் #
    1309
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    நீரும் நிழலது இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.
  • விளக்கம்
    நீரும் நிழலினிடத்தில் இருந்தால் குடிக்க இனியதாகும்; அது போல ஊடலும் அன்புடையவரிடத்தில் இனியதாகும்.
  • Translation
    in English
    Water is pleasant in the cooling shade;
    So coolness for a time with those we love.
  • Meaning
    Like water in the shade, dislike is delicious only in those who love.

1310. ஊடல் உணங்க விடுவாரோடு

1310. Oodal Unanga Viduvaarodu

  • குறள் #
    1310
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
    கூடுவேம் என்பது அவா.
  • விளக்கம்
    நான் பிணங்கியிருக்க, அதைத் தீர்க்காது என்னை விட்டுச் செல்பவரோடு என்மனம் கூடுவேன் என்று கருதுவதற்குக் காரணம் ஆசையே.
  • Translation
    in English
    Of her who leaves me thus in variance languishing,
    To think within my heart with love is fond desire.
  • Meaning
    It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.