Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Impartiality. Show all posts
Showing posts with label Impartiality. Show all posts

0111. தகுதி எனவொன்று நன்றே

0111. Thaguthi Enavondru Nandre

  • குறள் #
    0111
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.
  • விளக்கம்
    பகைவர், நண்பர், அயலார் என்னும் வேறுபாடின்றி எல்லோரிடத்தும் முறைமை தவறாது நடந்தால் அந்நடுவுநிலைமை என்னும் ஓர் அறமே நன்மையைத் தரும்.
  • Translation
    in English
    If justice, failing not, its quality maintain,
    Giving to each his due, -'tis man's one highest gain.
  • Meaning
    That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

0112. செப்பம் உடையவன் ஆக்கஞ்

0112. Seppam Udaiyavan Aakkanj

  • குறள் #
    0112
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
  • விளக்கம்
    நடுவுநிலை உடையவனுடைய செல்வம் மற்றவர் செல்வம் போல் அழிந்து போகாமல், அவனது சந்ததிக்கும் உதவக் கூடியதாகும்.
  • Translation
    in English
    The just man's wealth unwasting shall endure,
    And to his race a lasting joy ensure.
  • Meaning
    The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

0113. நன்றே தரினும் நடுவிகந்தாம்

0113. Nandre Tharinum Naduvigandhaam

  • குறள் #
    0113
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
  • விளக்கம்
    தீமையைத்தராது நன்மையே தருவதானாலும் நடு நிலை தவறுவதால் உண்டாகின்ற செல்வத்தை அப்பொழுதே கைவிட வேண்டும்.
  • Translation
    in English
    Though only good it seem to give, yet gain
    By wrong acquired, not e'en one day retain!
  • Meaning
    Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.

0114. தக்கார் தகவிலர் என்பது

0114. Thakkaar Thagavilar Enbathu

  • குறள் #
    0114
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.
  • விளக்கம்
    ஒருவர் நடுவுநிலையுல்லவர் அல்லது இல்லாதவர் என்பதை, அவருக்குப்பின் நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.
  • Translation
    in English
    Who just or unjust lived shall soon appear:
    By each one's offspring shall the truth be clear.
  • Meaning
    The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

0115. கேடும் பெருக்கமும் இல்லல்ல

0115. Kedum Perukkamum Illalla

  • குறள் #
    0115
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி.
  • விளக்கம்
    தாழ்வும், உயர்வும் ஒருவர் வாழ்வில் இல்லாதவை அல்ல. அவரவர் வினைகளால் வரும் என்பதை அறிந்து, நடுவுநிலை தவறாதிருத்தல் அறிவால் நிறைந்தவர்க்கு அழகாகும்.
  • Translation
    in English
    The gain and loss in life are not mere accident;
    Just mind inflexible is sages' ornament.
  • Meaning
    Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

0116. கெடுவல்யான் என்பது அறிகதன்

0116. Keduvalyaan Enbathu Arigathan

  • குறள் #
    0116
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்.
  • விளக்கம்
    ஒருவன் மனம் நடுவுநிலையிலிருந்து நீங்கி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைத்தால், 'நான்கெட்டு விடுவேன்' என்பதை அறிவானாக.
  • Translation
    in English
    If, right deserting, heart to evil turn,
    Let man impending ruin's sign discern!
  • Meaning
    Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."

0117. கெடுவாக வையாது உலகம்

0117. Keduvaaga Vaiyaathu Ulagam

  • குறள் #
    0117
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
  • விளக்கம்
    நடவுநிலைமை தவறாத அறநெறியை மேற்கொண்டொழுகும் ஒருவன் அடையும் வறுமையை, அறிவுடையோர் தாழ்வாகக் கருதமாட்டார்.
  • Translation
    in English
    The man who justly lives, tenacious of the right,
    In low estate is never low to wise man's sight.
  • Meaning
    The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

0118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்

0118. Samanseithu Seerthookkung Kolpol

  • குறள் #
    0118
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.
  • விளக்கம்
    முன் சமமாக நின்று, பின் தன்னிடத்தில் வைக்கப்பட்ட பொருளின் அளவை காட்டும் துலாக்கோல் போல, நடுவு நிலைமையிலிருந்து தவறாதிருத்தல் அறிவுடையோர்க்கு அழகாகும்.
  • Translation
    in English
    To stand, like balance-rod that level hangs and rightly weighs,
    With calm unbiassed equity of soul, is sages' praise.
  • Meaning
    To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

0119. சொற்கோட்டம் இல்லது செப்பம்

0119. Sorkottam Illathu Seppam

  • குறள் #
    0119
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.
  • விளக்கம்
    நடுவுநிலையாவது ஒருவனது சொல்லில் குற்றம் இல்லாதிருத்தல். அவனது உள்ளம் நடுவு நிலைமையில் இருக்குமானால், சொல்லில் குற்றம் இல்லாத நிலைமை உண்டாகும்.
  • Translation
    in English
    Inflexibility in word is righteousness,
    If men inflexibility of soul possess.
  • Meaning
    Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

0120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்

0120. Vaanigam Seivaarkku Vaanigam

  • குறள் #
    0120
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
    Impartiality
  • குறள்
    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்.
  • விளக்கம்
    பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பாதுகாத்து வாணிகம் செய்பவர்க்கு வாணிகம் வளரும்.
  • Translation
    in English
    As thriving trader is the trader known,
    Who guards another's interests as his own.
  • Meaning
    The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.