Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Not Envying. Show all posts
Showing posts with label Not Envying. Show all posts

0161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன்

0161. Ozhukkaaraak Kolga Oruvanthan

  • குறள் #
    0161
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
  • விளக்கம்
    ஒருவன் தன் மனதில் பொறாமை இல்லாதிருக்கும் நல் இயல்பினைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    As 'strict decorum's' laws, that all men bind,
    Let each regard unenvying grace of mind.
  • Meaning
    Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

0162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார்

0162. Vizhuppetrin Akthoppathu Illaiyaar

  • குறள் #
    0162
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
  • விளக்கம்
    எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருக்கும் குணத்தை ஒருவன் பெற்றிருந்தால், அவன் பெறுதற்குரிய செல்வங்களுள் அதனை ஒப்பது வேறு இல்லை.
  • Translation
    in English
    If man can learn to envy none on earth,
    'Tis richest gift, -beyond compare its worth.
  • Meaning
    Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towards others.

0163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்

0163. Aranaakkam Vendaathaan Enbaan

  • குறள் #
    0163
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்.
  • விளக்கம்
    பிறனுடைய செல்வத்தைக் கண்டு மகிழாது பொறாமைப் படுகின்றவன், தனக்கு அறத்தையும் செல்வத்தையும் விரும்பாதவன் என்று சொல்லப்படுவான்.
  • Translation
    in English
    Nor wealth nor virtue does that man desire 'tis plain,
    Whom others' wealth delights not, feeling envious pain.
  • Meaning
    Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."

0164. அழுக்காற்றின் அல்லவை செய்யார்

0164. Azhukkaatrin Allavai Seiyaar

  • குறள் #
    0164
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.
  • விளக்கம்
    தீய செயலால் துன்பம் வருதலை அறிந்த அறிவுடையார், பொறாமையினால் அறமல்லாதவற்றைச் செய்ய மாட்டார்.
  • Translation
    in English
    The wise through envy break not virtue's laws,
    Knowing ill-deeds of foul disgrace the cause.
  • Meaning
    (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

0165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்

0165. Azhukkaaru Udaiyaarkku Adhusaalum

  • குறள் #
    0165
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்காயும் கேடீன் பது.
  • விளக்கம்
    பொறாமை உடையவரைத் துன்புறுத்த அவரிடம் உள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் அப்பொறாமை அவர்க்குத் தவறாது தீமை செய்து விடும்.
  • Translation
    in English
    Envy they have within! Enough to seat their fate!
    Though foemen fail, envy can ruin consummate.
  • Meaning
    To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

0166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்

0166. Koduppathu Azhukkaruppaan Sutram

  • குறள் #
    0166
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
  • விளக்கம்
    ஒருவன் பிறனுக்குக் கொடுக்க, அவ்வாறு கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகின்றவனுடைய சுற்றம், உடையும், உணவுமின்றித் துன்பப்படும்.
  • Translation
    in English
    Who scans good gifts to others given with envious eye,
    His kin, with none to clothe or feed them, surely die.
  • Meaning
    He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

0167. அவ்வித்து அழுக்காறு உடையானைச்

0167. Avviththu Azhukkaaru Udaiyaanaich

  • குறள் #
    0167
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
  • விளக்கம்
    அழுக்காறு உடையவனைத் திருமகள் பொறுக்காதவளாகி, தன் தமக்கையாகிய மூத்தவளுக்குக் காட்டிவிட்டுத் தான் நீங்கி விடுவாள்.
  • Translation
    in English
    From envious man good fortune's goddess turns away,
    Grudging him good, and points him out misfortune's prey.
  • Meaning
    Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

0168. அழுக்காறு எனஒரு பாவி

0168. Azhukkaaru Enaoru Paavi

  • குறள் #
    0168
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
  • விளக்கம்
    பொறாமை என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, தன்னை உடையவனை இம்மையில் வறியனாக்கிக் கெடுத்து, மறுமையில் நரகத்தில் செலுத்தி விடும்.
  • Translation
    in English
    Envy, embodied ill, incomparable bane,
    Good fortune slays, and soul consigns to fiery pain.
  • Meaning
    Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

0169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

0169. Avviya Nenjaththaan Aakkamum

  • குறள் #
    0169
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.
  • விளக்கம்
    பொறாமையுடையவனிடத்தில் செல்வமும், நல்ல உள்ளமுடையவனிடத்தில் வறுமையும் வந்தால், அவை ஆராயத் தக்கவையாகும்.
  • Translation
    in English
    To men of envious heart, when comes increase of joy,
    Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ.
  • Meaning
    The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

0170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை

0170. Azhukkatru Agandraarum Illai

  • குறள் #
    0170
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    அழுக்காறாமை (Azhukkaaraamai)
    Not Envying
  • குறள்
    அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
  • விளக்கம்
    பொறாமை கொண்டு பெருமை அடைந்தாருமிலர்; பொறாமை இல்லாதவர்களில் செல்வ வளர்ச்சியில் குறைபாடு அடைந்தாருமிலர்.
  • Translation
    in English
    No envious men to large and full felicity attain;
    No men from envy free have failed a sure increase to gain.
  • Meaning
    Never have the envious become great; never have those who are free from envy been without greatness.