Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Baseness. Show all posts
Showing posts with label Baseness. Show all posts

1071. மக்களே போல்வர் கயவர்

1071. Makkale Polvar Kayavar

  • குறள் #
    1071
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.
  • விளக்கம்
    கீழ்மக்கள் தோற்றத்தினால் மனிதரைப் போலவே இருப்பார்கள்; குணங்களால் மனிதராகார்; இவ்வகையான ஒற்றுமையை நாம் வேறு எங்கும் கண்டதில்லை.
  • Translation
    in English
    The base resemble men in outward form, I ween;
    But counterpart exact to them I've never seen.
  • Meaning
    The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

1072. நன்றறி வாரிற் கயவர்

1072. Nandrari Vaarir Kayavar

  • குறள் #
    1072
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத்து அவலம் இலர்.
  • விளக்கம்
    கீழ்மக்கள், நன்மையை அறிபவர்களை விட மகிழ்ச்சியுடையவர்கள்; ஏனென்றால், அவர்கள் நெஞ்சில் கவலை இல்லாதவர்களாவர்.
  • Translation
    in English
    Than those of grateful heart the base must luckier be,
    Their minds from every anxious thought are free!
  • Meaning
    The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).

1073. தேவர் அனையர் கயவர்

1073. Thevar Anaiyar Kayavar

  • குறள் #
    1073
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.
  • விளக்கம்
    தேவர்கள் தாம் விரும்பிய வண்ணம் நடப்பார்கள்; கீழ்மக்களும் தாம் விரும்பியவாறே செய்தொழுகுவர். ஆகையால், தேவர்களும் கீழ்மக்களும் ஒப்பாவர்.
  • Translation
    in English
    The base are as the Gods; they too
    Do ever what they list to do!
  • Meaning
    The base resemble the Gods; for the base act as they like.

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின்

1074. Agappatti Aavaaraik Kaanin

  • குறள் #
    1074
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
  • விளக்கம்
    கீழ்மகன் ஒருவன், தனக்குக் கீழ்பட்டு நடப்பவனைக் கண்டால், தான் அவனை விட உயர்ந்தவன் என்று கருதி இறுமாப்பான்.
  • Translation
    in English
    When base men those behold of conduct vile,
    They straight surpass them, and exulting smile.
  • Meaning
    The base feels proud when he sees persons whose acts meaner than his own.

1075. அச்சமே கீழ்களது ஆசாரம்

1075. Achchame Keezhkalathu Aasaaram

  • குறள் #
    1075
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
  • விளக்கம்
    கீழ்மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அவர்களது அச்சமே; அதுவன்றி அவர்களால் விரும்பப்படும் பொருள் ஒழுக்கத்தினால் கிடைப்பதாயின் அதனாலும் சிறிது ஒழுக்கம் உண்டாகும்.
  • Translation
    in English
    Fear is the base man's virtue; if that fail,
    Intense desire some little may avail.
  • Meaning
    (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

1076. அறைபறை அன்னர் கயவர்தாம்

1076. Araiparai Annar Kayavarthaam

  • குறள் #
    1076
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
  • விளக்கம்
    தாம் கேட்ட இரகசியங்களைக் கொண்டு சென்று பிறர்க்கு அறிவித்தலால், கயவர்கள் அடிக்கப்படும் பறையைப் போன்றவராவர்.
  • Translation
    in English
    The base are like the beaten drum; for, when they hear
    The sound the secret out in every neighbour's ear.
  • Meaning
    The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

1077. ஈர்ங்கை விதிரார் கயவர்

1077. Eerngai Vithiraar Kayavar

  • குறள் #
    1077
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.
  • விளக்கம்
    கீழ்மக்கள் தம் கன்னத்தை அடித்து உடைக்கக் கையைக் ஓங்கியவர்க்கல்லது, தாம் உண்டு கழுவிய கையையும் உதறமாட்டார்.
  • Translation
    in English
    From off their moistened hands no clinging grain they shake,
    Unless to those with clenched fist their jaws who break.
  • Meaning
    The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்

1078. Sollap Payanpaduvar Saandror

  • குறள் #
    1078
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்.
  • விளக்கம்
    ஒருவர் தம்மிடம் குறைகளைச் சொன்ன அளவில் மனம் இறங்கி மேன்மக்கள் பயன்படுவர்; கீழ்மக்கள் கரும்பைப் போல நெருக்கி வருந்தினால் தான் பயன்படுவர்.
  • Translation
    in English
    The good to those will profit yield fair words who use;
    The base, like sugar-cane, will profit those who bruise.
  • Meaning
    The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்

1079. Uduppathooum Unbathooum Kaanin

  • குறள் #
    1079
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.
  • விளக்கம்
    கீழ்மகன் பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் கண்டால், பொறாமையால் அவர்மீது குற்றம் காணவல்லவனாவன்.
  • Translation
    in English
    If neighbours clothed and fed he see, the base
    Is mighty man some hidden fault to trace?
  • Meaning
    The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

1080. எற்றிற் குரியர் கயவரொன்று

1080. Etrir Kuriyar Kayavarondru

  • குறள் #
    1080
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    கயமை (Kayamai)
    Baseness
  • குறள்
    எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
    விற்றற்கு உரியர் விரைந்து.
  • விளக்கம்
    கீழ்மக்கள் தமக்கு ஒரு துன்பம் வந்தபோது, விரைவில் தம்மை விற்றற்குரியவராவர்; வேறு எதற்குப் பயன் படுவர்?
  • Translation
    in English
    For what is base man fit, if griefs assail?
    Himself to offer, there and then, for sale!
  • Meaning
    The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?