Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The Fortification. Show all posts
Showing posts with label The Fortification. Show all posts

0741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

0741. Aatru Bavarkkum Aranporul

  • குறள் #
    0741
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
    போற்று பவர்க்கும் பொருள்.
  • விளக்கம்
    படையெடுத்துச் சென்று போர் செய்பவர்க்கும் கோட்டை சிறந்த துணையாகும்; பகைவருக்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்க்கும் சிறந்த துணையாகும்.
  • Translation
    in English
    A fort is wealth to those who act against their foes;
    Is wealth to them who, fearing, guard themselves from woes.
  • Meaning
    A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

0742. மணிநீரும் மண்ணும் மலையும்

0742. Manineerum Mannum Malaiyum

  • குறள் #
    0742
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்.
  • விளக்கம்
    மணிபோல் தெளிந்த நீர்நிலையுடைய அகழியும், வெளி நிலமும், மலையும் அழகிய நிழல் தரும் காவற்காடும் உடையதே கோட்டை.
  • Translation
    in English
    A fort is that which owns fount of waters crystal clear,
    An open space, a hill, and shade of beauteous forest near.
  • Meaning
    A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

0743. உயர்வகலம் திண்மை அருமைஇந்

0743. Uyarvagalam Thinmai Arumaiin

  • குறள் #
    0743
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்.
  • விளக்கம்
    உயர்ச்சியும் அகலமும் வலிமையும் பகைவரால் கடத்தற் கருமையும் ஆகிய நான்கும் பொருந்தியதே சிறந்த அரண் என நூலுரைக்கும்.
  • Translation
    in English
    Height, breadth, strength, difficult access:
    Science declares a fort must these possess.
  • Meaning
    The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.

0744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி

0744. Sirukaapir Peridaththa Thaagi

  • குறள் #
    0744
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.
  • விளக்கம்
    காக்க வேண்டிய இடம் சிறியதாயும், அகன்ற இடத்தையுடையதாயும், சூழ்ந்த பகைவைன் ஊக்கத்தை அழிப்பதாயும் உள்ளதே அரண்.
  • Translation
    in English
    A fort must need but slight defence, yet ample be,
    Defying all the foeman's energy.
  • Meaning
    A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

0745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி

0745. Kolarkarithaaik Kondakoozhth Thaagi

  • குறள் #
    0745
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீரது அரண்.
  • விளக்கம்
    பகைவர் கைப்பற்றுதற்கரியதாய், உள்ளே பலவகை உணவுப் பொருட்களை உடையதாய், வீரர் நின்று போர் செய்வதற்கு வாய்ப்புடையதாய் உள்ளதே அரண்.
  • Translation
    in English
    Impregnable, containing ample stores of food,
    A fort for those within, must be a warlike station good.
  • Meaning
    A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.

0746. எல்லாப் பொருளும் உடைத்தாய்

0746. Ellap Porulum Udaiththai

  • குறள் #
    0746
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
    நல்லாள் உடையது அரண்.
  • விளக்கம்
    உள்ளே இருப்பவருக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் உடையதாய், பகைவர் தாக்கும்போது போர் செய்ய உதவும் நல்ல வீரரை உடையதாய் உள்ளதே அரண்.
  • Translation
    in English
    A fort, with all munitions amply stored,
    In time of need should good reserves afford.
  • Meaning
    A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

0747. முற்றியும் முற்றா தெறிந்தும்

0747. Mutriyum Mutraa Therindhum

  • குறள் #
    0747
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரியது அரண்.
  • விளக்கம்
    பகைவர் முற்றுகையிட்டுச் சூழ்ந்தும், அவ்வாறு சூழாது ஒருமுகமாகப் போர்செய்தும், கீழ் அறை அறுத்து உள்ளே நுழைந்தும் கைப்பற்றுதற்கரியதே அரண்.
  • Translation
    in English
    A fort should be impregnable to foes who gird it round,
    Or aim there darts from far, or mine beneath the ground.
  • Meaning
    A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

0748. முற்றாற்றி முற்றி யவரையும்

0748. Mutritru Mutri Yavaraiyum

  • குறள் #
    0748
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வது அரண்.
  • விளக்கம்
    முற்றுகையிட வல்லவராகி வந்து முற்றுகையிட்ட பகைவரை, உள்ளே நின்றவர் இடம்விட்டுப் பெயராமல் நின்று போர் புரிந்து வெல்லும்படி அமைந்ததே அரண்.
  • Translation
    in English
    Howe'er the circling foe may strive access to win,
    A fort should give the victory to those who guard within.
  • Meaning
    That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.

0749. முனைமுகத்து மாற்றலர் சாய

0749. Munaimugaththu Maatralar Saaya

  • குறள் #
    0749
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.
  • விளக்கம்
    போர் நடக்கும் இடத்தில் பகைவர் அழியும்படி, உள்ளே நிற்பவர் செய்யும் போர்ச்செயலால் உயர்வு பெற்றுச் சிறந்ததே அரண்.
  • Translation
    in English
    At outset of the strife a fort should foes dismay;
    And greatness gain by deeds in every glorious day.
  • Meaning
    A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.

0750. எனைமாட்சித் தாகியக் கண்ணும்

0750. Enaimaatchith Thaagiyak Kannum

  • குறள் #
    0750
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரணியல் (Araniyal) - Essentials of a State
  • அதிகாரம்
    அரண் (Aran)
    The Fortification
  • குறள்
    எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்.
  • விளக்கம்
    அரண் எல்லாச் சிறப்புக்களையும் உடையதாயிருப்பினும், செயல் செய்பவர் சிறப்பிலர் என்றால், அரண் இருந்தும் இல்லாதது போலாகும்.
  • Translation
    in English
    Howe'er majestic castled walls may rise,
    To craven souls no fortress strength supplies.
  • Meaning
    Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.