Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The Possession of Decorum. Show all posts
Showing posts with label The Possession of Decorum. Show all posts

0131. ஒழுக்கம் விழுப்பந் தரலான்

0131. Ozhukkam Vizhuppand Tharalaan

  • குறள் #
    0131
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
  • விளக்கம்
    ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைக் கொடுப்பதால், அதனை உயிரைவிட மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    'Decorum' gives especial excellence; with greater care
    'Decorum' should men guard than life, which all men share.
  • Meaning
    Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

0132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

0132. Parindhombik Kaakka Ozhukkam

  • குறள் #
    0132
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
  • விளக்கம்
    ஒழுக்கத்தை வருந்தியும் பாதுகாத்தல் வேண்டும். ஏனென்றால், அரண்கள் எல்லாவற்றுள்ளும் ஆராய்ந்து பார்த்தால் அவ்வோழுக்கமே சிறந்த துணையாக உள்ளது.
  • Translation
    in English
    Searching, duly watching, learning, 'decorum' still we find;
    Man's only aid; toiling, guard thou this with watchful mind.
  • Meaning
    Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

0133. ஒழுக்கம் உடைமை குடிமை

0133. Ozhukkam Udaimai Kudimai

  • குறள் #
    0133
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
  • விளக்கம்
    ஒருவன் உயர்ந்த குளத்தில் பிறந்தவனாதலை நல்லொழுக்கம் காட்டும்; ஒழுக்கத்தினின்று தவறுதல் அவனைத் தாழ்ந்த குலத்தினனாக்கி விடும்.
  • Translation
    in English
    'Decorum's' true nobility on earth;
    'Indecorum's' issue is ignoble birth.
  • Meaning
    Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.

0134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்

0134. Marappinum Othuk Kolalaagum

  • குறள் #
    0134
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
  • விளக்கம்
    மறை நூல்களைக் கற்பவன் கற்றதை மறக்க நேர்ந்தாலும் அதனை மீண்டும் கற்றுக்கொள்ளலாம். அவனது ஒழுக்கத்தில் குறைவுபட்டால் அவனுடைய குடியின் சிறப்புக் கெடும்.
  • Translation
    in English
    Though he forget, the Brahman may regain his Vedic lore;
    Failing in 'decorum due,' birthright's gone for evermore.
  • Meaning
    A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.

0135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று

0135. Azhukkaa Rudaiyaankan Aakkampondru

  • குறள் #
    0135
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
  • விளக்கம்
    பொறாமையுடையவனிடம் செல்வம் நிற்காது போல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி இல்லையாகும்.
  • Translation
    in English
    The envious soul in life no rich increase of blessing gains,
    So man of 'due decorum' void no dignity obtains.
  • Meaning
    Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.

0136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்

0136. Ozhukkaththin Olkaar Uravor

  • குறள் #
    0136
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
  • விளக்கம்
    ஒழுக்கம் தவறுவதால் தமக்குக் குற்றம் உண்டாவதை உணர்ந்து, அறிவுடையோர் அவ்வோழுக்கத்திலிருந்து தவற மாட்டார்.
  • Translation
    in English
    The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
    Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.
  • Meaning
    Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

0137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

0137. Ozhukkaththin Eithuvar Menmai

  • குறள் #
    0137
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
  • விளக்கம்
    ஒழுக்கத்தினால் எல்லாரும் மேன்மையை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுபவர் அடையக் கூடாத பழியை அடைவர்.
  • Translation
    in English
    'Tis source of dignity when 'true decorum' is preserved;
    Who break 'decorum's' rules endure e'en censures undeserved.
  • Meaning
    From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

0138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

0138. Nandrikku Viththaagum Nallozhukkam

  • குறள் #
    0138
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.
  • விளக்கம்
    நல்லோழுக்கமானது நன்மைக்குக் காரணமாகும்; தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தைக் கொடுக்கும்.
  • Translation
    in English
    'Decorum true' observed a seed of good will be;
    'Decorum's breach' will sorrow yield eternally.
  • Meaning
    Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.

0139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே

0139. Ozhukka Mudaiyavarkku Ollaave

  • குறள் #
    0139
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
  • விளக்கம்
    மறந்தும் தீயசொற்களை வாயினால் சொல்லும் செயல் நல்லொழுக்கம் உடையவர்க்கு ஆகாது.
  • Translation
    in English
    It cannot be that they who 'strict decorum's' law fulfil,
    E'en in forgetful mood, should utter words of ill.
  • Meaning
    Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.

0140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

0140. Ulagaththodu Otta Ozhugal

  • குறள் #
    0140
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
  • அதிகாரம்
    ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
    The Possession of Decorum
  • குறள்
    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.
  • விளக்கம்
    அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.
  • Translation
    in English
    Who know not with the world in harmony to dwell,
    May many things have learned, but nothing well.
  • Meaning
    Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.