Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Inconsistent Conduct. Show all posts
Showing posts with label Inconsistent Conduct. Show all posts

0271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

0271. Vanja Manaththaan Paditrozhukkam

  • குறள் #
    0271
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.
  • விளக்கம்
    கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை எனினும் அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து பூதங்களும் கண்டு தம்முள்ளே சிரிக்கும்.
  • Translation
    in English
    Who with deceitful mind in false way walks of covert sin,
    The five-fold elements his frame compose, decide within.
  • Meaning
    The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.

0272. வானுயர் தோற்றம் எவன்செய்யும்

0272. Vaanuyar Thotram Evanseiyum

  • குறள் #
    0272
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
    தான்அறி குற்றப் படின்.
  • விளக்கம்
    குற்றமென அறிந்தும் அதனைத் தன் மனமறியச் செய்வானானால், வானம்போல் உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்?
  • Translation
    in English
    What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
    If heart dies down through sense of self-detected fault?
  • Meaning
    What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

0273. வலியில் நிலைமையான் வல்லுருவம்

0273. Valiyil Nilaimaiyaan Valluruvam

  • குறள் #
    0273
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
  • விளக்கம்
    மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன் தவவேடம் பூணுதல், பசு புலித்தோல் போர்த்துக் கொண்டு பயிரை மேய்தல் போன்றதாகும்.
  • Translation
    in English
    As if a steer should graze wrapped round with tiger's skin,
    Is show of virtuous might when weakness lurks within.
  • Meaning
    The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

0274. தவமறைந்து அல்லவை செய்தல்

0274. Thavamaraindhu Allavai Seithal

  • குறள் #
    0274
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
  • விளக்கம்
    தவவேடத்தில் மறைந்திருந்து தவமல்லாதவற்றைச் செய்தல், வேட்டுவன் புதரில் மறைந்திருந்து பறவையைப் பிடிப்பது போன்றதாகும்.
  • Translation
    in English
    'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
    When, clad in stern ascetic garb, one secret evil works.
  • Meaning
    He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.

0275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம்

0275. Patratrem Enbaar Paditrozhukkam

  • குறள் #
    0275
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.
  • விளக்கம்
    எமக்குப்பற்று இல்லை என்று சொல்லுபவரின் பொய்யான ஒழுக்கம், அப்பொழுது இனிது போலத் தோன்றினாலும் பின்னர் பல துன்பங்களையும் தரும்.
  • Translation
    in English
    'Our souls are free,' who say, yet practise evil secretly,
    'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.
  • Meaning
    The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."

0276. நெஞ்சின் துறவார் துறந்தார்போல்

0276. Nenjin Thuravaar Thurandhaarpol

  • குறள் #
    0276
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
  • விளக்கம்
    மனத்தில் ஆசையை விடாதவராய், ஆசையை விட்டவர் போலக் கபடஞ்செய்து வாழ்கின்றவரைக் காட்டிலும் கொடியவர் எவரும் இலர்.
  • Translation
    in English
    In mind renouncing nought, in speech renouncing every tie,
    Who guileful live,- no men are found than these of 'harder eye'.
  • Meaning
    Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).

0277. புறங்குன்றி கண்டனைய ரேனும்

0277. Purankundri Kandanaiya Renum

  • குறள் #
    0277
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து.
  • விளக்கம்
    குன்றிமணியின் மேற்புறம் போல வேடத்தால் செம்மையுடைவராகக் காணப்பட்டாலும் மனத்திலே குன்றிமணியின் மூக்குப்போல் கறுத்திருப்பவரை இவ்வுலகம் கொண்டுள்ளது.
  • Translation
    in English
    Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
    Inward, like tip of 'kunri' bead, as black as night.
  • Meaning
    (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

0278. மனத்தது மாசாக மாண்டார்

0278. Manaththathu Maasaaga Maandaar

  • குறள் #
    0278
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.
  • விளக்கம்
    மனத்திலே அழுக்கு இருக்க, தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போல் காட்டி, நீரில் முழுகி, நடிப்பவர் பலர் இவ்வுலகில் உள்ளனர்.
  • Translation
    in English
    Many wash in hollowed waters, living lives of hidden shame;
    Foul in heart, yet high upraised of men in virtuous fame.
  • Meaning
    There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).

0279. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்

0279. Kanaikodithu Yaazhkodu Sevvithuaang

  • குறள் #
    0279
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல்.
  • விளக்கம்
    அம்பு வடிவில் நேரானதாயினும் செயலால் கொடியது; யாழ், வடிவில் வளைவாக இருப்பினும் செயலால் இனிது; அவை போல, மக்களின் செயல்கண்டு அவர்களின் குணங்களை அறிதல் வேண்டும்.
  • Translation
    in English
    Cruel is the arrow straight, the crooked lute is sweet,
    Judge by their deeds the many forms of men you meet.
  • Meaning
    As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

0280. மழித்தலும் நீட்டலும் வேண்டா

0280. Mazhiththalum Neettalum Vendaa

  • குறள் #
    0280
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
    Inconsistent Conduct
  • குறள்
    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.
  • விளக்கம்
    தவத்திற்கு ஆகாதவை என்று உயர்ந்தோர் விலக்கிய ஒழுக்கங்களை நீக்கிவிட்டால், தவம் செய்பவர்க்குத் தலைமயிரை மழித்தலும், வளர்த்தலுமாகிய வெளி வேடங்கள் வேண்டியனவல்ல.
  • Translation
    in English
    What's the worth of shaven head or tresses long,
    If you shun what all the world condemns as wrong?
  • Meaning
    There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.