Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Perfectness. Show all posts
Showing posts with label Perfectness. Show all posts

0981. கடன்என்ப நல்லவை எல்லாம்

0981. Kadanenba Nallavai Ellaam

  • குறள் #
    0981
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
  • விளக்கம்
    தமது கடமை இதுவென்று அறிந்து, நற்குணங்களை மேற்கொண்டோழுகுபவர்க்கு நல்லவை என்ற குணங்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் என்று அறிஞர் உரைப்பர்.
  • Translation
    in English
    All goodly things are duties to the men, they say
    Who set themselves to walk in virtue's perfect way.
  • Meaning
    It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

0982. குணநலம் சான்றோர் நலனே

0982. Kunanalam Saandror Nalane

  • குறள் #
    0982
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
  • விளக்கம்
    சான்றோரது சிறப்பாவது குணங்களாலாகிய நலமே, அவையல்லாத உருப்புகளாலாகிய நலம் எவ்வகை அழகிலும் சேர்ந்ததன்று.
  • Translation
    in English
    The good of inward excellence they claim,
    The perfect men; all other good is only good in name.
  • Meaning
    The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.

0983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்

0983. Anbunaan Oppuravu Kannottam

  • குறள் #
    0983
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
    ஐந்துசால் ஊன்றிய தூண்.
  • விளக்கம்
    அன்புடைமை, நாணம், உதவி செய்தல், கண்ணோட்டம், உண்மை பேசுதல் என்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பு என்னும் பாரத்தைச் சுமக்கும் தூண்களாகும்.
  • Translation
    in English
    Love, modesty, beneficence, benignant grace,
    With truth, are pillars five of perfect virtue's resting-place.
  • Meaning
    Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.

0984. கொல்லா நலத்தது நோன்மை

0984. Kollaa Nalaththathu Nonmai

  • குறள் #
    0984
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு.
  • விளக்கம்
    கொல்லாமையாகிய அறத்தினைக் கொண்டிருப்பது தவம். பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாதிருப்பது சால்பு.
  • Translation
    in English
    The type of 'penitence' is virtuous good that nothing slays;
    To speak no ill of other men is perfect virtue's praise.
  • Meaning
    Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.

0985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்

0985. Aatruvaar Aatral Panithal

  • குறள் #
    0985
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.
  • விளக்கம்
    ஒரு செயலை முடிப்பவரது வலிமையாவது, தாழ்ந்து நடத்தல்; அஃது அறிவுடையோர் பகைவரை நண்பராக்கும் கருவியுமாகும்.
  • Translation
    in English
    Submission is the might of men of mighty acts; the sage
    With that same weapon stills his foeman's rage.
  • Meaning
    Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.

0986. சால்பிற்குக் கட்டளை யாதெனின்

0986. Saalpirkuk Kattalai Yaathenin

  • குறள் #
    0986
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்.
  • விளக்கம்
    சால்பாகிய பொன்னின் அளவு அறிவதற்கு உரை கல்லாகிய செயல் எதுவென்றால், அது, தம்மை விடத் தாழ்ந்தவரிடத்தும் தமக்குத் தோல்வி வந்தால் அதனை ஒப்புக் கொள்ளுதலாகும்.
  • Translation
    in English
    What is perfection's test? The equal mind.
    To bear repulse from even meaner men resigned.
  • Meaning
    The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

0987. இன்னாசெய் தார்க்கும் இனியவே

0987. Innaasei Thaarkkum Iniyave

  • குறள் #
    0987
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.
  • விளக்கம்
    நிறை குணத்தராகிய சான்றோர், தமக்குத் துன்பம் செய்தவர்கட்கும் இன்பம் தருபவற்றைச் செய்யவில்லையென்றால், சால்பு என்னும் தகுதியுடைமை என்ன பயன் உடையது?
  • Translation
    in English
    What fruit doth your perfection yield you, say!
    Unless to men who work you ill good repay?
  • Meaning
    Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

0988. இன்மை ஒருவற்கு இனிவன்று

0988. Inmai Oruvarku Inivandru

  • குறள் #
    0988
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
  • விளக்கம்
    சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால், அவனுக்கு வறுமை ஓர் இழிவாகாது.
  • Translation
    in English
    To soul with perfect virtue's strength endued,
    Brings no disgrace the lack of every earthly good.
  • Meaning
    Poverty is no disgrace to one who abounds in good qualities.

0989. ஊழி பெயரினும் தாம்பெயரார்

0989. Oozhi Peyarinum Thaampeyaraar

  • குறள் #
    0989
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார்.
  • விளக்கம்
    நற்குணம் என்று சொல்லப்படும் கடலுக்குக் கரை எனப்படும் பெரியார், ஊழிக்காலத்தில் உலகமே நிலை மாறினாலும் தாம் தம் அறநெறியிலிருந்து விலக மாட்டார்.
  • Translation
    in English
    Call them of perfect virtue's sea the shore,
    Who, though the fates should fail, fail not for evermore.
  • Meaning
    Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

0990. சான்றவர் சான்றாண்மை குன்றின்

0990. Saandravar Saandraanmai Kundrin

  • குறள் #
    0990
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    சான்றாண்மை (Saandraanmai)
    Perfectness
  • குறள்
    சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
    தாங்காது மன்னோ பொறை.
  • விளக்கம்
    குணநிறைவுடையவர் தங்கள் தன்மையில் குறைவு படுவாராயின், இப்பெரிய பூமியும் தன் பாரத்தைப் பொறுக்க மாட்டாது.
  • Translation
    in English
    The mighty earth its burthen to sustain must cease,
    If perfect virtue of the perfect men decrease.
  • Meaning
    If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.