Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Energy. Show all posts
Showing posts with label Energy. Show all posts

0591. உடையர் எனப்படுவது ஊக்கம்

0591. Udayar Enappaduvathu Ookkam

  • குறள் #
    0591
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
  • விளக்கம்
    ஒருவர் உடையர் என்று சொல்லச் சிறந்து நிற்பது ஊக்கமாகும். அஃது இல்லாதவர் வேறு உடையதாகிய பொருள்களைப் பெற்றிருந்தாலும் உடையராகார்.
  • Translation
    in English
    'Tis energy gives men o'er that they own a true control;
    They nothing own who own not energy of soul.
  • Meaning
    Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?

0592. உள்ளம் உடைமை உடைமை

0592. Ullam udaimai Udaimai

  • குறள் #
    0592
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
  • விளக்கம்
    ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலை பெற்ற உடைமையாகும். மற்றைய பொருளுடைமை நிலையில்லாமல் நீங்கிவிடும்.
  • Translation
    in English
    The wealth of mind man owns a real worth imparts,
    Material wealth man owns endures not, utterly departs.
  • Meaning
    The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

0593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்

0593. Aakkam Ezhandhemendru Allaavaar

  • குறள் #
    0593
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
  • விளக்கம்
    ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப்பொருளாக உள்ளவர் 'யாம் செல்வத்தை இழந்து விட்டோம்' என்று சொல்லி வருந்தமாட்டார்.
  • Translation
    in English
    'Lost is our wealth,' they utter not this cry distressed,
    The men of firm concentred energy of soul possessed.
  • Meaning
    They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."

0594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்

0594. Aakkam Atharvinaaich Chellum

  • குறள் #
    0594
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.
  • விளக்கம்
    செல்வம் வழிகேட்டுக் கொண்டு தளர்வில்லாத முயற்சி உடையவனைச் சென்று அடையும்.
  • Translation
    in English
    The man of energy of soul inflexible,
    Good fortune seeks him out and comes a friend to dwell.
  • Meaning
    Wealth will find its own way to the man of unfailing energy.

0595. வெள்ளத் தனைய மலர்நீட்டம்

0595. Vellath Thanaiya Malarneettam

  • குறள் #
    0595
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.
  • விளக்கம்
    பூத்தண்டின் நீளம் அது நிற்கும் நீரின் அளவாகும். அதுபோல் மக்களும் தங்கள் ஊக்கத்தின் அளவே உயர்வு பெறுவர்.
  • Translation
    in English
    With rising flood the rising lotus flower its stem unwinds;
    The dignity of men is measured by their minds.
  • Meaning
    The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.

0596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

0596. Ulluva Thellaam Uyarvullal

  • குறள் #
    0596
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
  • விளக்கம்
    உயர்வானவற்றையே எப்பொழுதும் நினைத்து முயலுதல் வேண்டும்; அவை தவறிப் போனாலும் அந்த எண்ணத்தைக் கைவிடக் கூடாது.
  • Translation
    in English
    Whate'er you ponder, let your aim be loftly still,
    Fate cannot hinder always, thwart you as it will.
  • Meaning
    In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

0597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

0597. Sithaividaththu Olkaar Uravor

  • குறள் #
    0597
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.
  • விளக்கம்
    உடலை மறைக்கும் அளவுக்கு அம்புகள் தைக்கப் பெற்றாலும் யானை தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல் மன எழுச்சியுடையவர் அழிவு வந்தவிடத்தும் தளராமல் தம் பெருமையை நிலை நிறுத்துவர்.
  • Translation
    in English
    The men of lofty mind quail not in ruin's fateful hour,
    The elephant retains his dignity mind arrows' deadly shower.
  • Meaning
    The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

0598. உள்ளம் இலாதவர் எய்தார்

0598. Ullam Ilaathavar Eithaar

  • குறள் #
    0598
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.
  • விளக்கம்
    மனஎழுச்சி இல்லாதவர் இவ்வுலகத்தாருள் 'நாம் கோடை உடையோம்' என்று சொல்லப்படும் மதிப்பைப் பெறமாட்டார்.
  • Translation
    in English
    The soulless man can never gain
    Th' ennobling sense of power with men.
  • Meaning
    Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".

0599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும்

0599. Pariyathu Koorngkottathu Aayinum

  • குறள் #
    0599
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெருஉம் புலிதாக் குறின்.
  • விளக்கம்
    யானை பெரிய உடம்பையும், கூர்மையான கொம்புகளையும் உடையதானாலும், புலி தாக்குமானால் அச்சப்படும்.
  • Translation
    in English
    Huge bulk of elephant with pointed tusk all armed,
    When tiger threatens shrinks away alarmed!
  • Meaning
    Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

0600. உரமொருவற்கு உள்ள வெறுக்கை

0600. Uramoruvarku Ulla Verukkai

  • குறள் #
    0600
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
    Energy
  • குறள்
    உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
    மரம்மக்க ளாதலே வேறு.
  • விளக்கம்
    ஒருவனுக்கு ஊக்கமிகுதியே உறுதியான வலிமையாகும். அஃது இல்லாதவர் மரத்துக்குச் சமமாவர். இவர்கள் மக்கள் உருவில் இருப்பதே வேறுபாடு.
  • Translation
    in English
    Firmness of soul in man is real excellance;
    Others are trees, their human form a mere pretence.
  • Meaning
    Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.