Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The Dread of Mendicancy. Show all posts
Showing posts with label The Dread of Mendicancy. Show all posts

1061. கரவாது உவந்தீயும் கண்ணன்னார்

1061. Karavaathu Uvantheeyum Kannannaar

  • குறள் #
    1061
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.
  • விளக்கம்
    தம்மிடத்தில் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் படியான கண்போன்ற சிறந்தவரிடத்திலும் இரவாமல் இருத்தலே கோடி மடங்கு நல்லது.
  • Translation
    in English
    Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
    Even from those, like eyes in worth, who nought concealing gladly give.
  • Meaning
    Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

1062. Irandhum Uyirvaazhthal Vendin

  • குறள் #
    1062
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.
  • விளக்கம்
    இவ்வுலகத்தைப் படைத்தவன் இரந்தும் உயிர் வாழ வேண்டும் என்று விதித்தானாயின், அவன் எங்கும் அலைந்து கெடுவானாக.
  • Translation
    in English
    If he that shaped the world desires that men should begging go,
    Through life's long course, let him a wanderer be and perish so.
  • Meaning
    If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

1063. இன்மை இடும்பை இரந்துதீர்

1063. Inmai Idumbai Irandhutheer

  • குறள் #
    1063
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்.
  • விளக்கம்
    வறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்ப்போம் என, முயற்சியைக் கைவிட்ட வல்லமைபோல் வன்மையானது வேறு இல்லை.
  • Translation
    in English
    Nothing is harder than the hardness that will say,
    'The plague of penury by asking alms we'll drive away.'
  • Meaning
    There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

1064. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே

1064. Idamellaam Kollaath Thagaiththe

  • குறள் #
    1064
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு.
  • விளக்கம்
    உணவுக்கு இடமில்லாதபோதும் இரத்தலுக்கு உடன் படாத பண்பு, உலகமெல்லாம் கொள்ள முடியாத பெருமையுடையது.
  • Translation
    in English
    Who ne'er consent to beg in utmost need, their worth
    Has excellence of greatness that transcends the earth.
  • Meaning
    Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

1065. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்

1065. Thenneer Adupurkai Ayinum

  • குறள் #
    1065
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கினிய தில்.
  • விளக்கம்
    தன் முயற்சியினால் வந்தது தெளிந்த நீர் போன்று சமைத்த கூழேயாயினும் அதனை உண்ணுவதினும் மேம்பட்ட இன்பம் வேறு இல்லை.
  • Translation
    in English
    Nothing is sweeter than to taste the toil-won cheer,
    Though mess of pottage as tasteless as the water clear.
  • Meaning
    Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

1066. ஆவிற்கு நீரென்று இரப்பினும்

1066. Aavirku Neerendru Irappinum

  • குறள் #
    1066
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்த தில்.
  • விளக்கம்
    'இப்பசுவுக்குத் தண்ணீர் தாருங்கள்' என்று பிறரை இரத்தலும் ஆகாது; அவ்விரத்தல் போல ஒருவனுடைய நாவிற்கு இழிவு தருவது வேறு இல்லை.
  • Translation
    in English
    E'en if a draught of water for a cow you ask,
    Nought's so distasteful to the tongue as beggar's task.
  • Meaning
    There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

1067. இரப்பன் இரப்பாரை எல்லாம்

1067. Irappan Irappaarai Ellaam

  • குறள் #
    1067
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    கரப்பார் இரவன்மின் என்று.
  • விளக்கம்
    இரக்கச் செல்கின்றவர்களை எல்லாம், 'பொருள் கொடுக்காமல் மறைப்பவரிடம் இரக்காதிருங்கள்' என வேண்டிக் கொள்கிறேன்.
  • Translation
    in English
    One thing I beg of beggars all, 'If beg ye may,
    Of those who hide their wealth, beg not, I pray.'
  • Meaning
    I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."

1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி

1068. Iravennum Yemaappil Thoni

  • குறள் #
    1068
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்.
  • விளக்கம்
    இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத மரக்கலம், கொடுக்காமல் மறைத்தல் எனும் வழிய பாறையோடு தாக்கினால் பிளந்துவிடும்.
  • Translation
    in English
    The fragile bark of beggary
    Wrecked on denial's rock will lie.
  • Meaning
    The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

1069. இரவுள்ள உள்ளம் உருகும்

1069. Iravulla Ullam Urugum

  • குறள் #
    1069
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
  • விளக்கம்
    இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரையும்; இல்லை என்று சொல்லுவதன் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து போகும்.
  • Translation
    in English
    The heart will melt away at thought of beggary,
    With thought of stern repulse 'twill perish utterly.
  • Meaning
    To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.

1070. கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ

1070. Karappavarkku Yaankolikkum Kollo

  • குறள் #
    1070
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
  • அதிகாரம்
    இரவச்சம் (Iravachcham)
    The Dread of Mendicancy
  • குறள்
    கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்.
  • விளக்கம்
    இரப்பவனுக்கு ஒன்றை இரக்கும்போதே உயிர் போன்றதே! உள்ள பொருளை இல்லை என்று மறைக்கும் ஒளிப்பவர்க்கு உயிர் எங்கே சென்று ஒளிக்குமோ?
  • Translation
    in English
    E'en as he asks, the shamefaced asker dies;
    Where shall his spirit hide who help denies?
  • Meaning
    Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?