Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Rejoicing in the Embrace. Show all posts
Showing posts with label Rejoicing in the Embrace. Show all posts

1101. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்

1101. Kandukettu Unduyirththu Utrariyum

  • குறள் #
    1101
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள.
  • விளக்கம்
    கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புல இன்பங்களும் விளங்குகின்ற வளையணிந்த இவளிடத்தே விளங்குகின்றன.
  • Translation
    in English
    All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
    In this resplendent armlets-bearing damsel live!
  • Meaning
    The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).

1102. பிணிக்கு மருந்து பிறமன்

1102. Pinikku Marundhu Piraman

  • குறள் #
    1102
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து.
  • விளக்கம்
    நோய்க்கு மருந்தாவன நோயல்லாத பிறபொருள்கள்; அழகிய அணிகள் அணிந்தவளால் உண்டான நோய்க்குத் தானே மருந்தாக உள்ளாள்.
  • Translation
    in English
    Disease and medicine antagonists we surely see;
    This maid, to pain she gives, herself is remedy.
  • Meaning
    The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்

1103. Thaamveezhvaar Menrol Thuyilin

  • குறள் #
    1103
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.
  • விளக்கம்
    தாம் விரும்புகின்ற பெண்களின் மெல்லிய தோளிடத்தே உறங்குதல் போலத் திருமாலின் உலகில் வாழும் வாழ்வு இனியதாகுமோ?
  • Translation
    in English
    Than rest in her soft arms to whom the soul is giv'n,
    Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?
  • Meaning
    Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

1104. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்

1104. Neengin Therooum Kurukunkaal

  • குறள் #
    1104
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்.
  • விளக்கம்
    விட்டுப் பிரிந்தால் சுடும்; கிட்ட நெருங்கினால் குளிரும்; இத்தகைய நெருப்பை இவள் எங்கிருந்து பெற்றாள்?
  • Translation
    in English
    Withdraw, it burns; approach, it soothes the pain;
    Whence did the maid this wondrous fire obtain?
  • Meaning
    From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

1105. வேட்ட பொழுதின் அவையவை

1105. Vetta Pozhuthin Avaiyavai

  • குறள் #
    1105
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    வேட்ட பொழுதின் அவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினாள் தோள்.
  • விளக்கம்
    பூக்கள் நிறைந்த கூந்தலையுடையவளது தோள்கள், விரும்பியபொழுது விரும்பப்பட்ட பொருள்கள் வந்து இன்பம் செய்வது போல் இன்பம் தரும்.
  • Translation
    in English
    In her embrace, whose locks with flowery wreaths are bound,
    Each varied form of joy the soul can wish is found.
  • Meaning
    The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால்

1106. Uruthoru uyirthalirppath Theendalaal

  • குறள் #
    1106
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
    அமிழ்தின் இயன்றன தோள்.
  • விளக்கம்
    இப்பெண்ணின் தோள்களை நான் தீண்டுந்தோறும் என் உயிர் தளிர்ப்பதால், இவளுடைய தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Ambrosia are the simple maiden's arms; when I attain
    Their touch, my withered life puts forth its buds again!
  • Meaning
    The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

1107. தம்மில் இருந்து தமதுபாத்து

1107. Thammil Irundhu Thamathupaaththu

  • குறள் #
    1107
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு.
  • விளக்கம்
    அழகிய நிறமுடைய இப்பெண்ணின் சேர்க்கை, தமது வீட்டிலிருந்து தமது முயற்சியால் பெற்ற பொருளைப் பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டது போல் இன்பம் செய்வதாகும்.
  • Translation
    in English
    As when one eats from household store, with kindly grace
    Sharing his meal: such is this golden maid's embrace.
  • Meaning
    The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

1108. வீழும் இருவர்க்கு இனிதே

1108. Veezhum Iruvarkku Inithe

  • குறள் #
    1108
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.
  • விளக்கம்
    காற்றும் இடையே சென்று பிரிக்க முடியாதபடி இறுக்கமாகத் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்புகின்ற இருவருக்கும் இனிதாகும்.
  • Translation
    in English
    Sweet is the strict embrace of those whom fond affection binds,
    Where no dissevering breath of discord entrance finds.
  • Meaning
    To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

1109. ஊடல் உணர்தல் புணர்தல்

1109. Oodal Unarthal Punarthal

  • குறள் #
    1109
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்.
  • விளக்கம்
    ஊடலும், ஊடல் நீங்குதலும், பின் புணர்தலுமாகிய இவை, காதால் பிணிக்கப்பட்டவர் பெற்ற பயன்களாகும்.
  • Translation
    in English
    The jealous variance, the healing of the strife, reunion gained:
    These are the fruits from wedded love obtained.
  • Meaning
    Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.

1110. அறிதோறு அறியாமை கண்டற்றால்

1110. Arithoru Ariyaamai Kandatraal

  • குறள் #
    1110
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
    Rejoicing in the Embrace
  • குறள்
    அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு.
  • விளக்கம்
    நூல்களைக் கற்குந்தோறும் முன்னிருந்த அறியாமை காணப்படுவது போல, இவளைச் சேரச்சேரக் காமமானது புதிதாகத் தோன்றுகிறது.
  • Translation
    in English
    The more men learn, the more their lack of learning they detect;
    'Tis so when I approach the maid with gleaming jewels decked.
  • Meaning
    As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well adorned female (only create a desire for more).