Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Renunciation. Show all posts
Showing posts with label Renunciation. Show all posts

0341. யாதனின் யாதனின் நீங்கியான்

0341. Yaathanin Yaathanin Neengiyaan

  • குறள் #
    0341
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
  • விளக்கம்
    எவன் எவ்வெப்பொருளில் ஆசையை ஒழித்தானோ, அவனுக்கு அவ்வப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை.
  • Translation
    in English
    From whatever, aye, whatever, man gets free,
    From what, aye, from that, no more of pain hath he!
  • Meaning
    Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

0342. வேண்டின்உண் டாகத் துறக்க

0342. Vendinun Daagath Thurakka

  • குறள் #
    0342
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டுஇயற் பால பல.
  • விளக்கம்
    துறந்தவர் அடையும் இன்பங்கள் பல. அவற்றை அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் அவ்வின்பங்களை அனுபவிக்கக் காலம் இருக்கும்படி விரைவிலே துறத்தல் வேண்டும்.
  • Translation
    in English
    'Renunciation' made- ev'n here true pleasures men acquire;
    'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
  • Meaning
    After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).

0343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை

0343. Adalvendum Aindhan Pulaththai

  • குறள் #
    0343
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
  • விளக்கம்
    ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒருமிக்க விட்டுவிடல் வேண்டும்.
  • Translation
    in English
    'Perceptions of the five' must all expire;
    Relinquished in its order each desire.
  • Meaning
    Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

0344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை

0344. Iyalbaagum Nonbirkondru Inmai

  • குறள் #
    0344
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
  • விளக்கம்
    தவம் செய்பவர்க்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தலே இயல்பாகும். பற்று உடையவராய் இருத்தல் மீண்டும் மயங்குதற்குக் காரணமாகும்.
  • Translation
    in English
    'Privation absolute' is penance true;
    'Possession' brings bewilderment anew.
  • Meaning
    To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.

0345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்

0345. Matrum Thodarppaadu Evankol

  • குறள் #
    0345
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
  • விளக்கம்
    பிறப்பறுக்க விரும்புபவர்க்கு, அதற்குத் துணையாகிய உடம்பும் வேண்டாத பொருளாகும்; அவ்வாறாயின், உடம்பினால் அனுபவிக்கப்படும் பொருள்களில் தொடர்பு எதற்கு?
  • Translation
    in English
    To those who sev'rance seek from being's varied strife,
    Flesh is burthen sore; what then other bonds of life?
  • Meaning
    What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

0346. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான்

0346. Yaanenathu Ennum Serukkuaruppaan

  • குறள் #
    0346
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.
  • விளக்கம்
    தானல்லாத உடம்பைத் தான் என்றும், தன்னுடையதல்லாத பொருளைத் தன்னுடையது என்றும் நினைத்து மயங்காதவன், வானவருக்கும் எட்டாத வீட்டுலகத்தை அடைவான்.
  • Translation
    in English
    Who kills conceit that utters 'I' and 'mine',
    Shall enter realms above the powers divine.
  • Meaning
    He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.

0347. பற்றி விடாஅ இடும்பைகள்

0347. Patri Vidaaa Idumbaigal

  • குறள் #
    0347
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு.
  • விளக்கம்
    பற்றுக்களை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத் துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றி நிற்கும்.
  • Translation
    in English
    Who cling to things that cling and eager clasp,
    Griefs cling to them with unrelaxing grasp.
  • Meaning
    Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

0348. தலைப்பட்டார் தீரத் துறந்தார்

0348. Thalaippattaar Theerath Thurandhaar

  • குறள் #
    0348
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
  • விளக்கம்
    முழுதும் துறந்தவர் வீட்டினை அடைந்தவராவர்; அவ்வாறு துறவாதவர் மயக்கமடைந்து பிறப்பாகிய வலையில் அகப்பட்டவராவர்.
  • Translation
    in English
    Who thoroughly 'renounce' on highest height are set;
    The rest bewildered, lie entangled in the net.
  • Meaning
    Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

0349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்

0349. Patratra Kanne Pirapparukkum

  • குறள் #
    0349
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்.
  • விளக்கம்
    பற்றுக்கள் அற்றபொழுது ஒருவனுடைய பிறப்பு அறும்; பற்றுக்கள் அறாவிட்டால் பிறந்து துன்பப்படுவதாகிய நிலையில்லாத் தன்மை காணப்படும்.
  • Translation
    in English
    When that which clings falls off, severed is being's tie;
    All else will then be seen as instability.
  • Meaning
    At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

0350. பற்றுக பற்றற்றான் பற்றினை

0350. Patruga Patratraan Patrinai

  • குறள் #
    0350
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
  • அதிகாரம்
    துறவு (Thuravu)
    Renunciation
  • குறள்
    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.
  • விளக்கம்
    பற்றற்ற கடவுளின் பக்தியை மனத்திற் கொள்ளுதல் வேண்டும். ஆசாபாசங்களை விடுவதற்குப் பற்றப் படுவதாகிய கடவுளைப் பக்தி செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
    Cling to that bond, to get thee free from every clinging thing.
  • Meaning
    Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.