Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The Correction of Faults. Show all posts
Showing posts with label The Correction of Faults. Show all posts

0431. செருக்குஞ் சினமும் சிறுமையும்

0431. Cherukkunj Chinamum Chirumaiyum

  • குறள் #
    0431
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து.
  • விளக்கம்
    அகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்கள் இல்லாத மன்னரது செல்வம், மற்றவர் செல்வத்தைக் காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் தன்மையுடையது.
  • Translation
    in English
    Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
    To sure increase of lofty dignity attain.
  • Meaning
    Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

0432. இவறலும் மாண்பிறந்த மானமும்

0432. Ivaralum Maanpirandha Maanamum

  • குறள் #
    0432
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு.
  • விளக்கம்
    உலோப குணமும், நன்மை தருதலில்லாத மானமும், அளவு கடந்த மகிழ்ச்சியும் மன்னனுக்குக் குற்றமாகும்.
  • Translation
    in English
    A niggard hand, o'erweening self-regard, and mirth
    Unseemly, bring disgrace to men of kingly brith.
  • Meaning
    Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

0433. தினைத்துணையாங் குற்றம் வரினும்

0433. Thinaiththunaiyaang Kutram Varinum

  • குறள் #
    0433
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்.
  • விளக்கம்
    பழிக்கு அஞ்சுவோர் தினையளவாகிய மிகச் சிறிய குற்றமே தமக்கு வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
  • Translation
    in English
    Though small as millet-seed the fault men deem;
    As palm tree vast to those who fear disgrace 'twill seem.
  • Meaning
    Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

0434. குற்றமே காக்க பொருளாகக்

0434. Kutrame Kaakka Porulaagak

  • குறள் #
    0434
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் த்ரூஉம் பகை.
  • விளக்கம்
    தனக்கு அழிவைத் தரும் பகை குற்றமே ஆகும். ஆகையால், தன்னிடத்தில் அக்குற்றம் வராமல் கருத்தில் கொண்டு காக்க வேண்டும்.
  • Translation
    in English
    Freedom from faults is wealth; watch heedfully
    'Gainst these, for fault is fatal enmity.
  • Meaning
    Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

0435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

0435. Varumunnark Kaavaathaan Vaazhkkai

  • குறள் #
    0435
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்.
  • விளக்கம்
    குற்றம் வருவதற்கு முன்னே, அதுவராமல் காத்துக் கொள்ளாத மன்னனது வாழ்க்கை, குற்றம் வந்தால், நெருப்பின் முன் நின்ற வைக்கோல் குவியல் போல அழிந்துவிடும்.
  • Translation
    in English
    His joy who guards not 'gainst the coming evil day,
    Like straw before the fire shall swift consume away.
  • Meaning
    The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

0436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்

0436. Thankutram Neekkip Pirarkutrang

  • குறள் #
    0436
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு.
  • விளக்கம்
    தன் குற்றத்தை முதலில் போக்கிப் பிறகு பிறரது குற்றத்தைக் கண்டு ஆராய்வானானால், மன்னனுக்கு யாதொரு குற்றமும் உண்டாகாது.
  • Translation
    in English
    Faultless the king who first his own faults cures, and then
    Permits himself to scan faults of other men.
  • Meaning
    What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

0437. செயற்பால செய்யா திவறியான்

0437. Seyarpaala Seiyaa Thivariyaan

  • குறள் #
    0437
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்.
  • விளக்கம்
    பொருளால் தனக்குச் செய்து கொள்ள வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளாது, அதன் மீது பற்று வைத்துச் செலவிடாதவனின் செல்வம், எஞ்சியிருக்கும் தன்மையின்றிக் கெட்டுவிடும்.
  • Translation
    in English
    Who leaves undone what should be done, with niggard mind,
    His wealth shall perish, leaving not a wrack behind.
  • Meaning
    The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

0438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை

0438. Patrullam Ennum Ivaranmai

  • குறள் #
    0438
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று.
  • விளக்கம்
    பொருள் மீது உள்ள பற்றுள்ளம் என்று சொல்லப்படுகின்ற உலோப குணமானது, குற்றங்கள் எல்லாவற்றுள்ளும் ஒன்றாக வைத்து எண்ணத்தக்கதன்று; அவற்றைவிடக் கொடியது.
  • Translation
    in English
    The greed of soul that avarice men call,
    When faults are summed, is worst of all.
  • Meaning
    Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

0439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

0439. Viyavarka Enjaandrum Thannai

  • குறள் #
    0439
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.
  • விளக்கம்
    எக்காலத்தும் தன்னை மதித்து வியப்படையக் கூடாது. நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.
  • Translation
    in English
    Never indulge in self-complaisant mood,
    Nor deed desire that yields no gain of good.
  • Meaning
    Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

0440. காதல காதல் அறியாமை

0440. Kaathala Kaathal Ariyaamai

  • குறள் #
    0440
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    குற்றங்கடிதல் (Kutrankadithal)
    The Correction of Faults
  • குறள்
    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்.
  • விளக்கம்
    மன்னன், தான் விரும்பிய போருளிடத்துத் தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறியாவண்ணம் அனுபவிக்க வல்லவனாயின், அவனை வஞ்சிக்க எண்ணும் பகைவரது சூழ்ச்சி பயனற்றதாகும்.
  • Translation
    in English
    If, to your foes unknown, you cherish what you love,
    Counsels of men who wish you harm will harmless prove.
  • Meaning
    If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.