Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The Possession of King. Show all posts
Showing posts with label The Possession of King. Show all posts

0421. அறிவற்றங் காக்குங் கருவி

0421. Arivatrang Kaakkung Karuvi

  • குறள் #
    0421
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்.
  • விளக்கம்
    அறிவானது, ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவரால் உள் புகுந்து அழிக்க முடியாத உள் கொட்டையுமாகும்.
  • Translation
    in English
    True wisdom wards off woes, A circling fortress high;
    Its inner strength man's eager foes Unshaken will defy.
  • Meaning
    Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

0422. சென்ற இடத்தால் செலவிடா

0422. Sendra Idaththaal Selavidaa

  • குறள் #
    0422
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.
  • விளக்கம்
    மனத்தைச் சென்ற வழியே செல்லவிடாது, நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமையிலிருந்து நீக்கி, நல்வழியில் செலுத்துவது அறிவு.
  • Translation
    in English
    Wisdom restrains, nor suffers mind to wander where it would;
    From every evil calls it back, and guides in way of good.
  • Meaning
    Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

0423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

0423. Epporul Yaryarvaaik Ketpinum

  • குறள் #
    0423
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
  • விளக்கம்
    எப்பொருளை எந்தகையோர் சொல்லக் கேட்டாலும், அப்பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவாகும்.
  • Translation
    in English
    Though things diverse from divers sages' lips we learn,
    'Tis wisdom's part in each the true thing to discern.
  • Meaning
    To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

0424. எண்பொருள வாகச் செலச்சொல்லித்

0424. Enporula Vaagach Chelachchollith

  • குறள் #
    0424
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.
  • விளக்கம்
    கேட்பவருக்கு எளிதில் விளங்கும் பொருளுடையதாகவும் அவர் மனம் கொள்ளும்படியாகவும் கூறிப் பிறர் கூறும் சொற்களில் மறைந்திருக்கும் நுண்பொருளைக் காண்பது அறிவாகும்.
  • Translation
    in English
    Wisdom hath use of lucid speech, words that acceptance win,
    And subtle sense of other men's discourse takes in.
  • Meaning
    To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

0425. உலகம் தழீஇய தொட்பம்

0425. Ulagam Thazheeeya Thotpam

  • குறள் #
    0425
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு.
  • விளக்கம்
    ஒருவனுக்கு உயர்ந்தோரை நட்பாக்குவது அறிவாகும்; பின்னர் அந்நட்பு மகிழ்வுடன் விரிதலும் வருந்திச் சுருங்கலுமின்றி ஒரே நிலையாகக் கொண்டிருத்தலும் அறிவாகும்.
  • Translation
    in English
    Wisdom embraces frank the world, to no caprice exposed;
    Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.
  • Meaning
    To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

0426. எவ்வ துறைவது உலகம்

0426. Evva Thuraivathu Ulagam

  • குறள் #
    0426
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு.
  • விளக்கம்
    உலகம் எவ்வாறு ஒழுகுகின்றதோ, அவ்வுலகத்தோடு சேர்ந்து தானும் அவ்வாறு நடப்பதே அறிவு.
  • Translation
    in English
    As dwells the world, so with the world to dwell
    In harmony- this is to wisely live and well.
  • Meaning
    To live as the world lives, is wisdom.

0427. அறிவுடையார் ஆவ தறிவார்

0427. Arivudaiyaar Aava Tharivaar

  • குறள் #
    0427
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
  • விளக்கம்
    அறிவுடையவர் பின் வரக்கூடியதை முன் அறிய வல்லார்; அதனை முன் அறிய மாட்டாதவர் அறிவில்லாதவர்.
  • Translation
    in English
    The wise discern, the foolish fail to see,
    And minds prepare for things about to be.
  • Meaning
    The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

0428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை

0428. Anjuva Thanjaamai Pethaimai

  • குறள் #
    0428
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில்.
  • விளக்கம்
    அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவில்லாமை; அச்சப்பட வேண்டியவற்றிற்கு அச்சப்படுதல் அறிவுடையோர் செயலாகும்.
  • Translation
    in English
    Folly meets fearful ills with fearless heart;
    To fear where cause of fear exists is wisdom's part.
  • Meaning
    Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

0429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்

0429. Ethirathaak Kaakkum Arivinaark

  • குறள் #
    0429
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்.
  • விளக்கம்
    பின் வரக்கூடியதை முன்னதாக அறிந்து, காக்க வல்ல அறிவுடையோர்க்கு, அவர் நடுங்கும்படி வருவதாகிய துன்பம் எதுவும் இல்லை.
  • Translation
    in English
    The wise with watchful soul who coming ills foresee;
    From coming evil's dreaded shock are free.
  • Meaning
    No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

0430. அறிவுடையார் எல்லா முடையார்

0430. Arivudaiyaar Ellaa Mudaiyaar

  • குறள் #
    0430
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) - Royalty
  • அதிகாரம்
    அறிவுடைமை (Arivudaimai)
    The Possession of King
  • குறள்
    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.
  • விளக்கம்
    அறிவுள்ளவர் வேறொன்றும் இல்லாவிட்டாலும் எல்லாச் செல்வங்களும் உடையவராவர்; அறிவு இல்லாதவர் வேறு எதை உடையவராயினும் ஒன்றும் இல்லாதவராவர்.
  • Translation
    in English
    The wise is rich, with ev'ry blessing blest;
    The fool is poor, of everything possessed.
  • Meaning
    Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.