Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Military Spirit. Show all posts
Showing posts with label Military Spirit. Show all posts

0771. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்

0771. Ennaimun Nillanmin Thevvir

  • குறள் #
    0771
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்நின்று கல்நின் றவர்.
  • விளக்கம்
    பகைவர்களே! என் தலைவன் எதிரே நின்று போர் செய்து மடிந்து, தமக்குக் கல் நடப்பெற்றவர் பலர்; ஆகையால், என் தலைவன் முன்னே நிற்காதீர்கள்.
  • Translation
    in English
    Ye foes! stand not before my lord! for many a one
    Who did my lord withstand, now stands in stone!
  • Meaning
    O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.

0772. கான முயலெய்த அம்பினில்

0772. Kaana Muyaleitha Ambinil

  • குறள் #
    0772
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
  • விளக்கம்
    காட்டில் ஓடும் முயலைப் பிழையாமல் எய்த அம்பை ஏந்துவதை விட, யானையை எரிந்து பிழைத்த வேல் ஏந்துதல் சிறப்பாகும்.
  • Translation
    in English
    Who aims at elephant, though dart should fail, has greater praise.
    Than he who woodland hare with winged arrow slays.
  • Meaning
    It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

0773. பேராண்மை என்ப தறுகண்ஒன்

0773. Peraanmai Enba Tharukanon

  • குறள் #
    0773
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு.
  • விளக்கம்
    பகைவரை எதிர்த்துப் போர் செய்வதைப் பெரிய ஆண்மை என்று கூறுவர்; அப்பகைவர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்து உதவி செய்தலை, அவ்வான்மையின் கூர்மை என்று கூறுவர்.
  • Translation
    in English
    Fierceness in hour of strife heroic greatness shows;
    Its edge is kindness to our suffering foes.
  • Meaning
    The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

0774. கைவேல் களிற்றொடு போக்கி

0774. Kaivel Kalitrodu Pokki

  • குறள் #
    0774
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்.
  • விளக்கம்
    கையில் வைத்திருந்த வேலை யானை மீது எறிந்து துரத்திவிட்டு, மேல்வரும் யானைமீது எறிய வேல் தேடித் திரிகின்ற வீரன், தன் மார்பில் பாய்ந்து கிடந்த பகைவரின் வேலைப் பிடுங்கி மகிழ்வான்.
  • Translation
    in English
    At elephant he hurls the dart in hand; for weapon pressed,
    He laughs and plucks the javelin from his wounded breast.
  • Meaning
    The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

0775. விழித்தகண் வேல்கொண டெறிய

0775. Vizhiththakan Velkona Deriya

  • குறள் #
    0775
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
    ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
  • விளக்கம்
    பகைவரைச் சினந்து பார்த்த கண், அவர் வேல் கொண்டு எறிய அப்பார்வையை மாற்றி இமைகொட்டுமாயின், அதுவே அவ்வீரர்க்குப் புறங்கொடுத்தது போலாகும்.
  • Translation
    in English
    To hero fearless must it not defeat appear,
    If he but wink his eye when foemen hurls his spear.
  • Meaning
    Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?

0776. விழுப்புண் படாதநாள் எல்லாம்

0776. Vizhuppun Padaathanaal Ellaam

  • குறள் #
    0776
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து.
  • விளக்கம்
    வீரன் போரில் புண்படாத நாட்களை, தன் வாழ்நாளில் வீணே கழித்த நாட்களாக எண்ணி வருந்துவான்.
  • Translation
    in English
    The heroes, counting up their days, set down as vain
    Each day when they no glorious wound sustain.
  • Meaning
    The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

0777. சுழலும் இசைவேண்டி வேண்டா

0777. Suzhalum Isaivendi Vendaa

  • குறள் #
    0777
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
  • விளக்கம்
    உலகில் பறந்து நிற்கும் புகழை விரும்பி உயிர் வாழ்தலை விரும்பாத வீரர், வீரக்கழல் அணிதல் அழகுடையது.
  • Translation
    in English
    Who seek for world-wide fame, regardless of their life,
    The glorious clasp adorns, sign of heroic strife.
  • Meaning
    The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

0778. உறின்உயிர் அஞ்சா மறவர்

0778. Urinuyir Anjaa Maravar

  • குறள் #
    0778
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினும் சீர்குன்றல் இலர்.
  • விளக்கம்
    போர் வந்தால் தம் உயிரைவிட அஞ்சாது அதன் மேற்செல்லும் வீரர், தமது அரசன் அது வேண்டாமென்று சினந்தாலும் அவ்வீரமிகுதியில் குன்றார்.
  • Translation
    in English
    Fearless they rush where'er 'the tide of battle rolls';
    The king's reproof damps not the ardour of their eager souls.
  • Meaning
    The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

0779. இழைத்தது இகவாமைச் சாவாரை

0779. Izhaiththathu Igavaamaich Chaavaarai

  • குறள் #
    0779
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
  • விளக்கம்
    தாம் கூறிய சபதம் தப்பாமல் சென்று இறக்கவல்ல வீரரை, அது தப்பியவிதம் சொல்லி இகழ்பவர் யார்?
  • Translation
    in English
    Who says they err, and visits them scorn,
    Who die and faithful guard the vow they've sworn?
  • Meaning
    Who would reproach with failure those who seal their oath with their death ?

0780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின்

0780. Purandhaarkan Neermalgach Chaagirpin

  • குறள் #
    0780
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    படையியல் (Padaiyiyal) - Army
  • அதிகாரம்
    படைச் செருக்கு (Padaich Cherukku)
    Military Spirit
  • குறள்
    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
    இரந்துகோள் தக்கது உடைத்து.
  • விளக்கம்
    தம்மை ஆண்டு காத்த அரசனது கண்களில் நீர் பெருகும்படி போரில் சாகப் பெறுவதாயின், அந்தச் சாவு இரந்தாகிலும் பெரும் தகுதியை உடையது.
  • Translation
    in English
    If monarch's eyes o'erflow with tears for hero slain,
    Who would not beg such boon of glorious death to gain?
  • Meaning
    If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.