Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label The Knowledge of the Council Chamber. Show all posts
Showing posts with label The Knowledge of the Council Chamber. Show all posts

0711. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக

0711. Avaiyarindhu Aaraindhu Solluga

  • குறள் #
    0711
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
  • விளக்கம்
    சொற்களைப் பயன்படுத்தத் தெரிந்த தூய குணமுடையவர், தாம் சொல்லும்போது அவையை அறிந்து ஆராய்ந்து சொல்வாராக.
  • Translation
    in English
    Men pure in heart, who know of words the varied force,
    Should to their audience known adapt their well-arranged discourse.
  • Meaning
    Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

0712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக

0712. Idaitherindhu Nangunarndhu Solluga

  • குறள் #
    0712
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.
  • விளக்கம்
    சொற்களின் வகையை ஆராய்ந்தறிந்த நல்லறிவுடையவர், சமயமறிந்து குற்றப்படாமல் தெளிந்து சொல்வாராக.
  • Translation
    in English
    Good men to whom the arts of eloquence are known,
    Should seek occasion meet, and say what well they've made their own.
  • Meaning
    Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).

0713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர்

0713. Avaiyariyaar Sollalmer Kolbavar

  • குறள் #
    0713
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.
  • விளக்கம்
    அவையின் தன்மையை அறியாது ஒன்றைச் சொல்ல முற்படுபவர், சொல்லின் வகையையும் அறியார்; சிறந்த படிப்பும் அவர்க்குப் பயன்படுவதில்லை.
  • Translation
    in English
    Unversed in councils, who essays to speak.
    Knows not the way of suasive words,- and all is weak.
  • Meaning
    Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

0714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல்

0714. Oliyaarmun Olliya Raathal

  • குறள் #
    0714
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணம் கொளல்.
  • விளக்கம்
    அறிவுடையோர்முன் அறிவுடையோராகப் பேசுதல் வேண்டும். அறியாதவர்முன் அறியாதவர் போல் பேசுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Before the bright ones shine as doth the light!
    Before the dull ones be as purest stucco white!
  • Meaning
    Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

0715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே

0715. Nandrendra Vatrullum Nandre

  • குறள் #
    0715
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு.
  • விளக்கம்
    தம்மைவிட அறிவால் மேம்பட்டவர் இருக்கும் அவையில் முன்னே சென்று ஒன்றைச் சொல்லாத அடக்கம், நல்லன என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்களுள் நல்லதாகும்.
  • Translation
    in English
    Midst all good things the best is modest grace,
    That speaks not first before the elders' face.
  • Meaning
    The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

0716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே

0716. Aatrin Nilaithalarndh Thatre

  • குறள் #
    0716
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
  • விளக்கம்
    அகன்ற நூற்பொருளை அறிந்து, அதன் மெய்ம்மையை உணர வல்லவர் அவையின் முன்பு ஒருவன் சொற்குற்றப்படுதல், ஒழுக்க நெறியில் செல்கின்றவன் நிலைதளர்ந்து வீழ்வது போலாகும்.
  • Translation
    in English
    As in the way one tottering falls, is slip before
    The men whose minds are filled with varied lore.
  • Meaning
    (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

0717. கற்றறிந்தார் கல்வி விளங்கும்

0717. Katrarindhaar Kalvi Vilangum

  • குறள் #
    0717
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொல்தெரிதல் வல்லார் அகத்து.
  • விளக்கம்
    குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர் உள்ள அவையில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது விளங்கித் தோன்றும்.
  • Translation
    in English
    The learning of the learned sage shines bright
    To those whose faultless skill can value it aright.
  • Meaning
    The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

0718. உணர்வ துடையார்முன் சொல்லல்

0718. Unarva Thudaiyaarmun Sollal

  • குறள் #
    0718
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
  • விளக்கம்
    தாமே அறியும் அறிவுடையார் முன்பு ஒன்றைச் சொல்வது, வளர்கின்ற பயிர் நின்ற பாத்தியுள் தண்ணீரை ஊற்றுவது போன்றதாகும்.
  • Translation
    in English
    To speak where understanding hearers you obtain,
    Is sprinkling water on the fields of growing grain!
  • Meaning
    Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

0719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க

0719. Pullavaiyul Pochchaandhum Sollarka

  • குறள் #
    0719
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்குசலச் சொல்லு வார்.
  • விளக்கம்
    நல்லோர் இருக்கும் அவையில், அவர்கள் மனத்தில் பதியுமாறு நல்ல பொருள்களைச் சொல்ல வல்லவர், அறிவிலார் உள்ள அவையில் எதையும் மறந்தும் சொல்லக் கூடாது.
  • Translation
    in English
    In councils of the good, who speak good things with penetrating power,
    In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.
  • Meaning
    Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

0720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

0720. Anganaththul Ukka Amizhthatraal

  • குறள் #
    0720
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
  • அதிகாரம்
    அவை அறிதல் (Avai Arithal)
    The Knowledge of the Council Chamber
  • குறள்
    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல்.
  • விளக்கம்
    அறிவால் தம்மினத்தாரல்லாதார் அவையில் நல்லவர் ஒன்றையும் சொல்லக்கூடாது; அவ்வாறு சொன்னால் தூய்மையற்ற முற்றத்தில் விழுந்த அமிழ்து போன்று வீணாகும்.
  • Translation
    in English
    Ambrosia in the sewer spilt, is word
    Spoken in presence of the alien herd.
  • Meaning
    To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.