Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Virtue. Show all posts
Showing posts with label Virtue. Show all posts

0001. அகர முதல எழுத்தெல்லாம்

0001. Agara Mudhala Ezhuththellaam

  • குறள் #
    0001
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
  • விளக்கம்
    எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.
  • Translation
    in English
    A, as its first of letters, every speech maintains;
    The "Primal Deity" is first through all the world's domains.
  • Meaning
    As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

0002. கற்றதனால் ஆய பயனென்கொல்

0002. Katrathanaal Aaya Payanenkol

  • குறள் #
    0002
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
  • விளக்கம்
    தூய அறிவுடைய கடவுளின் நல்ல திருவடிகளைத் தொழாதவருக்கு, கற்ற கல்வியினால் உண்டாகும் பயன் யாது? ஒன்றும் இல்லை.
  • Translation
    in English
    No fruit have men of all their studied lore,
    Save they the 'Purely Wise One's' feet adore.
  • Meaning
    What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

0003. மலர்மிசை ஏகினான் மாணடி

0003. Malarmisai Yeginaan Maanadi

  • குறள் #
    0003
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
  • விளக்கம்
    அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர், எல்லா உலகங்களுக்கும் மேலானதாகிய முத்தி உலகில் எப்பொழுதும் வாழ்வார்.
  • Translation
    in English
    His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
    In bliss long time shall dwell above this earthly plain.
  • Meaning
    They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

0004. வேண்டுதல் வேண்டாமை இலானடி

0004. Venduthal Vendaamai Ilaanadi

  • குறள் #
    0004
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
  • விளக்கம்
    விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.
  • Translation
    in English
    His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
    Shall not, through every time, of any woes complain.
  • Meaning
    To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

0005. இருள்சேர் இருவினையும் சேரா

0005. Irulser Iruvinaiyum Seraa

  • குறள் #
    0005
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  • விளக்கம்
    கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.
  • Translation
    in English
    The men, who on the 'King's' true praised delight to dwell,
    Affects not them the fruit of deeds done ill or well.
  • Meaning
    The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

0006. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்

0006. Porivaayil Aindhaviththaan Poitheer

  • குறள் #
    0006
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
  • விளக்கம்
    ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.
  • Translation
    in English
    Long live they blest, who 've stood in path from falsehood freed;
    His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
  • Meaning
    Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

0007. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்

0007. Thanakkuvamai Illaathaan Thaalserndhaark

  • குறள் #
    0007
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
  • விளக்கம்
    தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.
  • Translation
    in English
    Unless His foot, 'to Whom none can compare,' men gain,
    'Tis hard for mind to find relief from anxious pain.
  • Meaning
    Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

0008. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்

0008. Aravaazhi Andhanan Thaalserndhaark

  • குறள் #
    0008
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
  • விளக்கம்
    அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல்களைக் கடக்க இயலாது.
  • Translation
    in English
    Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
    'Tis hard the further bank of being's changeful sea to attain.
  • Meaning
    None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

0009. கோளில் பொறியின் குணமிலவே

0009. Kolil Poriyin Gunamilave

  • குறள் #
    0009
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
  • விளக்கம்
    எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், கேளாத செவி முதலியவை போலப் பயனற்றவையாகும்.
  • Translation
    in English
    Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
    Who stands, like palsied sense, is to all living functions dead.
  • Meaning
    The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

0010. Piravip Perunkadal Neendhuvar

  • குறள் #
    0010
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
    The Praise of God
  • குறள்
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
  • விளக்கம்
    கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.
  • Translation
    in English
    They swim the sea of births, the 'Monarch's' foot who gain;
    None others reach the shore of being's mighty main.
  • Meaning
    None can swim the great sea of births but those who are united to the feet of God.

0011. வான்நின்று உலகம் வழங்கி

0011. Vaannindru Ulagam Vazhangi

  • குறள் #
    0011
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
  • விளக்கம்
    மழை தவறாது பெய்தலால் இந்த உலகம் (உயிர்கள்) வாழ்ந்து வருகின்றது. ஆகையால், அந்த மழை உயிர்களுக்குச் சாவா மருந்து (அமிர்தம்) என்று சொல்லத் தக்கது.
  • Translation
    in English
    The world its course maintains through life that rain unfailing gives;
    Thus rain is known the true ambrosial food of all that lives.
  • Meaning
    By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

0012. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

0012. Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith

  • குறள் #
    0012
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.
  • விளக்கம்
    உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்ணுகின்றவர்க்குத் தானும் உணவாக அமைவது மழை.
  • Translation
    in English
    The rain makes pleasant food for eaters rise;
    As food itself, thirst-quenching draught supplies.
  • Meaning
    Rain produces good food, and is itself food.

0013. விண்இன்று பொய்ப்பின் விரிநீர்

0013. Vinindru Poippin Virineer

  • குறள் #
    0013
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.
  • விளக்கம்
    மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பொய்த்து விடுமானால், கடல் சூழ்ந்த பரந்த இவ்வுலகத்தில் பசி தோன்றி உயிர்களையெல்லாம் வருத்தும்.
  • Translation
    in English
    If clouds, that promised rain, deceive, and in the sky remain,
    Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
  • Meaning
    If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

0014. ஏரின் உழாஅர் உழவர்

0014. Yerin Uzhaaar Uzhavar

  • குறள் #
    0014
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.
  • விளக்கம்
    மழை என்னும் செல்வத்தின் வளம் குறையுமானால், உழவர்கள் கலப்பை கொண்டு உழமாட்டார்கள்.
  • Translation
    in English
    If clouds their wealth of waters fail on earth to pour,
    The ploughers plough with oxen's sturdy team no more.
  • Meaning
    If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

0015. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்

0015. Keduppathooum Kettaarkkuch Chaarvaaimat

  • குறள் #
    0015
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.
  • விளக்கம்
    பெய்யாமல் மக்களைக் கெடுக்க வல்லதும் மழை; அவ்வாறு கெட்டவர்குத் துணையாக அமைந்து அவர்களை வாழ வைக்க வல்லதும் மழையே.
  • Translation
    in English
    'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
    As, in the happy days before, it bids the ruined rise.
  • Meaning
    Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

0016. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்

0016. Visumbin Thuliveezhin Allaalmat

  • குறள் #
    0016
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.
  • விளக்கம்
    மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலல்லாமல், பசுமையான புல்லின் தலையையும் காண முடியாது.
  • Translation
    in English
    If from the clouds no drops of rain are shed.
    'Tis rare to see green herb lift up its head.
  • Meaning
    If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

0017. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

0017. Nedungkadalum Thanneermai Kundrum

  • குறள் #
    0017
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.
  • விளக்கம்
    மேகம் கடலில் நீரை முகந்து கொண்டு, மீண்டும் அந்நீரையே மழையாகப் பெய்யவில்லையென்றால், கடலிடத்துள்ள செல்வங்களும் குறையும்.
  • Translation
    in English
    If clouds restrain their gifts and grant no rain,
    The treasures fail in ocean's wide domain.
  • Meaning
    Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

0018. சிறப்பொடு பூசனை செல்லாது

0018. Sirappodu Poosanai Sellaathu

  • குறள் #
    0018
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
  • விளக்கம்
    மழை தவறாது பெய்யவில்லையென்றால், தேவர்களுக்கு இவ்வுலகத்தில் செய்யப்படும் விழாவும் பூசைகளும் நடைபெறா.
  • Translation
    in English
    If heaven grow dry, with feast and offering never more,
    Will men on earth the heavenly ones adore.
  • Meaning
    If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

0019. தானம் தவம்இரண்டும் தங்கா

0019. Thaanam Thavamirandum Thangaa

  • குறள் #
    0019
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.
  • விளக்கம்
    மழை பெய்யவில்லை என்றால், இப்பெரிய உலகத்திலே தானமும் தவமும் ஆகிய இரண்டும் நடைபெறா.
  • Translation
    in English
    If heaven its watery treasures ceases to dispense,
    Through the wide world cease gifts, and deeds of 'penitence'.
  • Meaning
    If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

0020. நீர்இன்று அமையாது உலகெனின்

0020. Neerindru Amaiyaathu Ulagenin

  • குறள் #
    0020
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) - Virtue
  • இயல்
    பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
  • அதிகாரம்
    வான் சிறப்பு (Vaan Sirappu)
    The Excellence of Rain
  • குறள்
    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
  • விளக்கம்
    எவ்வகையால் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லையென்றால் இல்லையாகும்.
  • Translation
    in English
    When water fails, functions of nature cease, you say;
    Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.
  • Meaning
    If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.