Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Alliance. Show all posts
Showing posts with label Alliance. Show all posts

0781. செயற்கரிய யாவுள நட்பின்

0781. Seyarkariya Yaavula Natpin

  • குறள் #
    0781
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
  • விளக்கம்
    நட்புப் போலச் செய்து கொள்ளுதற்கு அரிய பொருட்கள் எவை உள்ளன? அதைப்போல் பகைவர் செயலைத் தடுத்துக் காப்பதற்கு எவை உள்ளன?
  • Translation
    in English
    What so hard for men to gain as friendship true?
    What so sure defence 'gainst all that foe can do?
  • Meaning
    What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ?

0782. நிறைநீர நீரவர் கேண்மை

0782. Niraineera Neeravar Kenmai

  • குறள் #
    0782
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.
  • விளக்கம்
    அறிவுடையவர் நட்பு சந்திரனது பிறை நிறைவது போல நாள்தொறும் வளரும் தன்மையுடையது; அறிவில்லாதவர் நட்பு நிறைமதி பின் குறைவதுபோல நாள்தொறும் குறையுந்தன்மை யுடையது.
  • Translation
    in English
    Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
    Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
  • Meaning
    The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

0783. நவில்தொறும் நூல்நயம் போலும்

0783. Navilthorum Noolnayam Polum

  • குறள் #
    0783
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.
  • விளக்கம்
    நற்குணமுடையார் தம்முட் கொண்ட நட்பு, பழகும்போதெல்லாம், அவர்கட்கு இன்பம் அளித்தல், நூற் பொருள் கற்குந்தோறும் கற்பவர்க்கு இன்பம் செய்தல் போன்றதாகும்.
  • Translation
    in English
    Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
    So the heart by use grows fonder, Bound in friendship with the good.
  • Meaning
    Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

0784. நகுதற் பொருட்டன்று நட்டல்

0784. Naguthar Poruttandru Nattal

  • குறள் #
    0784
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு.
  • விளக்கம்
    நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்கன்று; அவரிடத்தில் தீய செய்கை கண்டபோது, முற்பட்டுச் சென்று கண்டித்து அறிவுரை சொல்லுதற்கே யாகும்.
  • Translation
    in English
    Nor for laughter only friendship all the pleasant day,
    But for strokes of sharp reproving, when from right you stray.
  • Meaning
    Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

0785. புணர்ச்சி பழகுதல் வேண்டா

0785. Punarchchi Pazhaguthal Vendaa

  • குறள் #
    0785
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.
  • விளக்கம்
    நட்புக்குச் சேர்ந்திருத்தலும், பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டாம். ஒத்த உணர்ச்சியே நட்பு எற்படுதற்குரிய உரிமையைத் தரும்.
  • Translation
    in English
    Not association constant, not affection's token bind;
    'Tis the unison of feeling friends unites of kindred mind.
  • Meaning
    Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

0786. முகநக நட்பது நட்பன்று

0786. Muganaga Natpathu Natpandru

  • குறள் #
    0786
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.
  • விளக்கம்
    ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று; அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்.
  • Translation
    in English
    Not the face's smile of welcome shows the friend sincere,
    But the heart's rejoicing gladness when the friend is near.
  • Meaning
    The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

0787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

0787. Azhivi Navaineekki Aaruyiththu

  • குறள் #
    0787
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.
  • விளக்கம்
    நட்பாவது, கேட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதே யாகும்.
  • Translation
    in English
    Friendship from ruin saves, in way of virtue keeps;
    In troublous time, it weeps with him who weeps.
  • Meaning
    (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).

0788. உடுக்கை இழந்தவன் கைபோல

0788. Udukkai Izhandhavan Kaipola

  • குறள் #
    0788
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
  • விளக்கம்
    ஆடை அவிழ்ந்தவனுடைய கை அதைப் பிடிப்பதற்கு விரைந்து செல்வதுபோலத் துன்பம் நேர்ந்தபோது விரைந்து சென்று அதனை நீக்குபவனே நண்பன் ஆவான்.
  • Translation
    in English
    As hand of him whose vesture slips away,
    Friendship at once the coming grief will stay.
  • Meaning
    (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

0789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

0789. Natpirkku Veetrirukkai Yaathenil

  • குறள் #
    0789
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
  • விளக்கம்
    நட்பிற்கு உயர்ந்த இடம் எது எனில், எக்காலத்தும் மாறுபாடின்றி முடிந்த வரையில் நண்பனைத் தளராமல் தாங்கும் திண்மையாகும்.
  • Translation
    in English
    And where is friendship's royal seat? In stable mind,
    Where friend in every time of need support may find.
  • Meaning
    Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).

0790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம்

0790. Inaiyar Ivaremakku Innamyaam

  • குறள் #
    0790
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பு (Natpu)
    Friendship
  • குறள்
    இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு.
  • விளக்கம்
    'இவர் நமக்கு இவ்வளவு அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையேம்' என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து சொன்னாலும் நட்பு சிறுமையாய்த் தோன்றும்.
  • Translation
    in English
    Mean is the friendship that men blazon forth,
    'He's thus to me' and 'such to him my worth'.
  • Meaning
    Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean.

0791. நாடாது நட்டலிற் கேடில்லை

0791. Naadaathu Nattalir Kedillai

  • குறள் #
    0791
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு.
  • விளக்கம்
    நட்பை விரும்பி அதனிடம் நிற்பவருக்கு, ஒருவனோடு நட்புச் செய்தபின் அதனைவிட முடியாது; ஆகையால், ஆராயாது நட்புச் செய்தலைப் போலக் கேடு தருவது வேறு இல்லை.
  • Translation
    in English
    To make an untried man your friend is ruin sure;
    For friendship formed unbroken must endure.
  • Meaning
    As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.

0792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை

0792. Aaindhaindhu Kollaathaan Kenmai

  • குறள் #
    0792
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்.
  • விளக்கம்
    பலவகையில் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்கு, அதனால் இறுதியில் தான் சாதற்கேதுவாகிய துன்பம் உண்டாகும்.
  • Translation
    in English
    Alliance with the man you have not proved and proved again,
    In length of days will give you mortal pain.
  • Meaning
    The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

0793. குணமும் குடிமையும் குற்றமும்

0793. Kunamum Kudimaiyum Kutramum

  • குறள் #
    0793
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.
  • விளக்கம்
    ஒருவனது குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், அவனது சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Temper, descent, defects, associations free
    From blame: know these, then let the man be friend to thee.
  • Meaning
    Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.

0794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு

0794. Kudippirandhu Thankan Pazhinaanu

  • குறள் #
    0794
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
  • விளக்கம்
    உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் உண்டாகும் பழிக்கு அஞ்சுகின்றவனை, அவன் விரும்பியது ஒன்றைக் கொடுத்தாயினும் நட்புக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Who, born of noble race, from guilt would shrink with shame,
    Pay any price so you as friend that man may claim.
  • Meaning
    The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

0795. அழச்சொல்லி அல்லது இடித்து

0795. Azhachcholli Allathu Idiththu

  • குறள் #
    0795
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
    வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
  • விளக்கம்
    குற்றமுள்ளதைச் செய்ய எண்ணினால் வருந்தும்படியாகச் சொல்லிக் கண்டிக்கும், உலக வழக்கை அறிந்து நடக்கும்படி செய்விக்கும் வல்லமையுடையவரைத் தேடி நட்புக் கொள்ளுதல் வேண்டும்.
  • Translation
    in English
    Make them your chosen friend whose words repentance move,
    With power prescription's path to show, while evil they reprove.
  • Meaning
    You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.

0796. கேட்டினும் உண்டோர் உறுதி

0796. Kettinum Undor Uruthi

  • குறள் #
    0796
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.
  • விளக்கம்
    கேடு வந்தவிடத்தும் ஒருவகை நன்மை உண்டு. அந்தக் கேடு நண்பர்களை நன்றாக அளந்து அறியும் ஓர் அளவு கோலாகும்.
  • Translation
    in English
    Ruin itself one blessing lends:
    'Tis staff that measures out one's friends.
  • Meaning
    Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

0797. ஊதியம் என்பது ஒருவற்குப்

0797. Oothiyam Enbathu Oruvarkup

  • குறள் #
    0797
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
  • விளக்கம்
    ஒருவனுக்கு இலாபம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவரின் நட்பைவிட்டு நீங்குதலேயாகும்.
  • Translation
    in English
    'Tis gain to any man, the sages say,
    Friendship of fools to put away.
  • Meaning
    It is indead a gain for one to renounce the friendship of fools.

0798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ

0798. Ullarka Ullam Sirukuva

  • குறள் #
    0798
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
  • விளக்கம்
    தம் ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினைக்கக் கூடாது; அதுபோலத் தனக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளக் கூடாது.
  • Translation
    in English
    Think not the thoughts that dwarf the soul; nor take
    For friends the men who friends in time of grief forsake.
  • Meaning
    Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.

0799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை

0799. Kedunkaalaik Kaividuvaar Kenmai

  • குறள் #
    0799
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்.
  • விளக்கம்
    துன்பக் காலத்தில் கைவிடுவார் நட்பினை, இறக்குங் காலத்தில் ஒருவன் நினைப்பானாயினும், அந்த இறப்பைவிட அந்த நினைவுதான் மனதைச் சுடும்.
  • Translation
    in English
    Of friends deserting us on ruin's brink,
    'Tis torture e'en in life's last hour to think.
  • Meaning
    The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.

0800. மருவுக மாசற்றார் கேண்மைஒன்

0800. Maruvuga Maasatraar Kenmaion

  • குறள் #
    0800
  • பால்
    பொருட்பால் (Porutpaal) - Wealth
  • இயல்
    நட்பியல் (Natpiyal) - Alliance
  • அதிகாரம்
    நட்பாராய்தல் (Natpaaraaithal)
    Investigation in Forming Friendship
  • குறள்
    மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு.
  • விளக்கம்
    குற்றமற்றவர் நட்பையே கொள்க; தனக்கு ஒப்பில்லாதவரின் நட்பினை அறியாது கொண்டானாயின், அவர் விரும்பியது ஒன்றைக் கொடுத்தாயினும் அந்நட்பை விட்டுவிடுக.
  • Translation
    in English
    Cling to the friendship of the spotless one's; whate'er you pay.
    Renounce alliance with the men of evil way.
  • Meaning
    Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).