Thirukural written by Thiruvalluvar consists of three books, the first book on Aram (the Way or Dharma), the second on Porul (Material or Artha) and the third on Inbam (Joy or Kama).

There are 37 chapters in the first book, the first four called Payiram or Prefactory Matter, the next twenty about Ill-Aram (the householder’s Dharma) and the next thirteen about Turavaram (the path of Renunciation). The second book on Porul contains seventy chapters, the first twenty dealing with Kings and their Duties, the succeeding thirty two chapters with the other matters concerning the State, and next thirteen, with Sundry Concerns. The third book on Inbam contains twenty five chapters, the first seven being on Pre Marital Love (Kalavu) and the next eighteen on Marital Love.

There are 133 chapters in all, each chapter contains ten distichs in the metre known as Kural and the work itself is now called by that name.

Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ

1081. Anangukol Aaimayil Kollo

  • குறள் #
    1081
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
  • விளக்கம்
    கனமான குழை என்னும் காதணியை அணிந்து நிற்கும் இவள் தெய்வப்பெண்ணோ! சிறந்த ஒரு மயிலோ! ஒரு மனிதப் பெண்ணோ? இவளை இன்னவள் என்று அறிய முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.
  • Translation
    in English
    Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
    Is she a maid of human kind? All wildered is my mind!
  • Meaning
    Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.

1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

1082. Nokkinaal Nokkethir Nokkuthal

  • குறள் #
    1082
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து.
  • விளக்கம்
    அழகிய பெண், என் பார்வைக்கு எதிரே பார்த்தல், தாக்கவரும் ஒரு தெய்வப் பெண் சேனையையும் கொண்டு வந்தாற்போன்ற ஒரு தன்மையை உடையது.
  • Translation
    in English
    She of the beaming eyes, To my rash look her glance replies,
    As if the matchless goddess' hand Led forth an armed band.
  • Meaning
    This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

1083. பண்டறியேன் கூற்றென் பதனை

1083. Pandariyen Kootren Pathanai

  • குறள் #
    1083
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு.
  • விளக்கம்
    கூற்று என்று சொல்லப்படுவதை முன்பு நான் கண்டறியேன்; இன்று நான் அதனை அறிந்து கொண்டேன்; அது பெண் தன்மையோடு போர் செய்யும் கண்களை உடையது.
  • Translation
    in English
    Death's form I formerly Knew not; but now 'tis plain to me;
    He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.
  • Meaning
    I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்

1084. Kandaar Uyirunnum Thotraththaal

  • குறள் #
    1084
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக்கு அமர்த்தன கண்.
  • விளக்கம்
    பெண் தன்மையுடன் கூடிய இப்பெண்ணுக்குக் கண்கள், தம்மைக் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத்துடன் அமைந்துள்ளன.
  • Translation
    in English
    In sweet simplicity, A woman's gracious form hath she;
    But yet those eyes, that drink my life, Are with the form at strife!
  • Meaning
    These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.

1085. கூற்றமோ கண்ணோ பிணையோ

1085. Kootramo Kanno Pinaiyo

  • குறள் #
    1085
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து.
  • விளக்கம்
    இக்கண்கள் இயமனோ, கண்களோ, பெண் மானோ நான் அறிகிலேன்; இப்பெண்ணின் பார்வையில் மூன்றும் அடங்கியிருக்கின்றன.
  • Translation
    in English
    IThe light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
    Or fawn's shy glance? All three appear In form of maiden here.
  • Meaning
    Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?

1086. கொடும்புருவம் கோடா மறைப்பின்

1086. Kodumpuruvam Kodaa Maraippin

  • குறள் #
    1086
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்இவள் கண்.
  • விளக்கம்
    வளைந்த புருவங்கள் நேராக நின்று மறைத்தால் இவள் கண்கள் நடுங்குவதற்குக் காரணமான துன்பத்தைச் செய்யமாட்டா.
  • Translation
    in English
    If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
    The shafts that wound this trembling heart Her eyes no more would dart.
  • Meaning
    Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows.

1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம்

1087. Kadaaak Kalitrinmer Katpadaam

  • குறள் #
    1087
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்.
  • விளக்கம்
    இப்பெண்ணின் நிமிர்ந்த முலைமேலிட்ட ஆடை, மதயானையின் மேலிட்ட முகபடாம் போன்றது.
  • Translation
    in English
    As veil o'er angry eyes Of raging elephant that lies,
    The silken cincture's folds invest This maiden's panting breast.
  • Meaning
    The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே

1088. Onnuthar Kooo Udaindhathe

  • குறள் #
    1088
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு.
  • விளக்கம்
    போர்க்களத்தில் பகைவரும் அஞ்சும்படியான என் வலிமை, விளங்குகின்ற நெற்றியையுடைய இவள் பொருட்டு அழிந்து விட்டது.
  • Translation
    in English
    Ah! woe is me! my might, That awed my foemen in the fight,
    By lustre of that beaming brow Borne down, lies broken now!
  • Meaning
    On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

1089. பிணையேர் மடநோக்கும் நாணும்

1089. Pinaiyer Madanokkum Naanum

  • குறள் #
    1089
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
    அணியெவனோ ஏதில தந்து.
  • விளக்கம்
    பெண்மான் போன்ற அழகிய அச்சப்படும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாக உடைய இவளுக்கு வேறு அணிகளை உண்டாக்கி அணிவதால் பயனில்லை.
  • Translation
    in English
    Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
    What added beauty can be lent; By alien ornament?
  • Meaning
    Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

1090. உண்டார்கண் அல்லது அடுநறாக்

1090. Undaarkan Allathu Adunaraak

  • குறள் #
    1090
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
    Beauty's Dart
  • குறள்
    உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று.
  • விளக்கம்
    உண்டவர்க்கு மட்டும் மகிழ்ச்சியைச் செய்யும் கள்ளைப் போலல்லாது கண்டவரிடத்தும் காமம் மகிழ்ச்சியைச் செய்யும்.
  • Translation
    in English
    The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
    But love hath rare felicity For those that only see!
  • Meaning
    Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

1091. இருநோக்கு இவளுண்கண் உள்ளது

1091. Irunokku Ivalunkan Ullathu

  • குறள் #
    1091
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
  • விளக்கம்
    இவளுடைய மையுண்ட கண்களுக்கு இரண்டு வகையான பார்வைகள் உண்டு; ஒரு பார்வை நோய் செய்யும்; மற்றொரு பார்வை அந்நோய்க்கு மருந்தாகும்.
  • Translation
    in English
    A double witchery have glances of her liquid eye;
    One glance is glance that brings me pain; the other heals again.
  • Meaning
    There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்

1092. Kankalavu Kollum Sirunokkam

  • குறள் #
    1092
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது.
  • விளக்கம்
    எனக்குத் தெரியாமல் என்னை பார்க்கும் இவள் கண்ணின் சிறு பார்வை, என்னுடைய விருப்பத்தில் சரிபாதி அளவன்று; அதைவிடப் பெரியதாகும்.
  • Translation
    in English
    The furtive glance, that gleams one instant bright,
    Is more than half of love's supreme delight.
  • Meaning
    A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்

1093. Nokkinaal Nokki Irainchinaal

  • குறள் #
    1093
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்.
  • விளக்கம்
    இவள் என்னை அன்புடன் பார்த்துத் தலைகுனிந்தால்; அச்செயல், எங்கள் அன்பாகிய பயிரை வளர்ப்பதற்கு இவள் பாய்ச்சிய நீராகும்.
  • Translation
    in English
    She looked, and looking drooped her head:
    On springing shoot of love 'its water shed!
  • Meaning
    She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்

1094. Yaannokkum Kaalai Nilannokkum

  • குறள் #
    1094
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.
  • விளக்கம்
    நான் பார்க்கும் போது இவள் நிலத்தைப் பார்த்து நிற்பாள்; நான் பார்க்காதபோதுதான் என்னைப் பார்த்துப் புண் சிரிப்புச் செய்வாள்.
  • Translation
    in English
    I look on her: her eyes are on the ground the while:
    I look away: she looks on me with timid smile.
  • Meaning
    When I look, she looks down; when I do not, she looks and smiles gently.

1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால்

1095. Kurikkondu Nokkaamai Allaal

  • குறள் #
    1095
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்.
  • விளக்கம்
    இவள் என்னை நேரே பார்க்கவில்லையேயன்றி, ஒரு கண்ணைச் சுருக்கியவள்போல என்னைப் பார்த்து மகிழ்வாள்.
  • Translation
    in English
    She seemed to see me not; but yet the maid
    Her love, by smiling side-long glance, betrayed.
  • Meaning
    She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

1096. உறாஅ தவர்போல் சொலினும்

1096. Uraaa Thavarpol Solinum

  • குறள் #
    1096
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்.
  • விளக்கம்
    அயலார்போல இவள் தோழி என்னிடம் கடுஞ்சொல் சொன்னாலும், அவள் சொல், கோபமில்லாதவரின் சொல் என்று விரைவில் அறியப்படும்.
  • Translation
    in English
    Though with their lips affection they disown,
    Yet, when they hate us not, 'tis quickly known.
  • Meaning
    Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல்

1097. Seraaach Chirusollum Setraarpol

  • குறள் #
    1097
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
  • விளக்கம்
    உள்ளே சினமில்லாதிருந்து சொல்லும் இழிந்த சொல்லும் பகைவர் போல் பார்த்தாலும் வெளியே தொடர்பில்லாதவர் போன்றிருந்து, உள்ளே நட்புடையவரின் குறிகளாகும்.
  • Translation
    in English
    The slighting words that anger feign, while eyes their love reveal.
    Are signs of those that love, but would their love conceal.
  • Meaning
    Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

1098. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான்

1098. Asaiyiyarku Undaandor Yeyaryaan

  • குறள் #
    1098
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்.
  • விளக்கம்
    நான் தலைவியைப் பார்க்க, அவள் அன்போடு சிரித்தாள்; அதனால், மெல்லிய இயல்பினையுடைய அவளது சிரிப்பில் ஒரு குறிப்பு உண்டு.
  • Translation
    in English
    I gaze, the tender maid relents the while;
    And, oh the matchless grace of that soft smile!
  • Meaning
    When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு

1099. Yethilaar Polap Pothunokku

  • குறள் #
    1099
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.
  • விளக்கம்
    வெளியே அயலார்போல ஒருவரை ஒருவர் பார்த்தல், காதல் உடையவர்களிடத்தில் உள்ள ஓர் இயல்பாகும்.
  • Translation
    in English
    The look indifferent, that would its love disguise,
    Is only read aright by lovers' eyes.
  • Meaning
    Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

1100. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்

1100. Kannodu Kaninai Nokkokkin

  • குறள் #
    1100
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிதல் (Kuripparithal)
    Recognition of the Signs (of Mutual Love)
  • குறள்
    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.
  • விளக்கம்
    கண்களோடு கண்கள் பார்வையால் ஒத்திருப்பனவாயின், அவர்கள் வாயிலிருந்துவரும் சொற்களால் ஒரு பயனும் இல்லை.
  • Translation
    in English
    When eye to answering eye reveals the tale of love,
    All words that lips can say must useless prove.
  • Meaning
    The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).